விராட் கோலியின் மிரட்டல் சாதனையை தூள் தூளாக்கிய வீரர்!

111

 

விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் முறியடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 46 பந்துகளில் 68 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம் அவர் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் சாதனையை சமன். டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் 52 இன்னிங்ஸ்களில் 2000 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

விராட் கோலி 56 இன்னிங்ஸ்களில் 2000 ஓட்டங்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில், முகமது ரிஸ்வான் 52 இன்னிங்ஸ்களில் அவரை பின்னுக்கு தள்ளினார்.

டி20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்:

முகமது ரிஸ்வான் (52 இன்னிங்ஸ்)
பாபர் அசாம் (52 இன்னிங்ஸ்)
விராட் கோலி (56 இன்னிங்ஸ்)
கே.எல்.ராகுல் (58 இன்னிங்ஸ்)
ஆரோன் பின்ச் (62 இன்னிங்ஸ்)

SHARE