விளம்பரமே வராமல் YouTube வீடியோ பார்ப்பது எப்படி? ஒரு பைசா செலவழிக்க வேண்டாம்

376

 

யூட்யூப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. யூட்யூப்பில் பலருக்கும் பிடிக்காத ஒரு விடயம் என்றால் அதில் வரும் விளம்பரங்கள் தான்

விளம்பரங்கள் இல்லாமல் YouTube-ஐ பார்ப்பதற்கு என்ன வழி?

அதிகாரப்பூர்வமாக யூட்யூப் விளம்பரங்களை அகற்ற விரும்புகிறீர்கள் என்றால் – யூட்யூப் ப்ரீமியம் மட்டுமே உங்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன்! YouTube Premium என்பது விளம்பரங்களில் இருந்து விடுபடுவதற்கான அதிகாரப்பூர்வமான வழிமுறையாகும், இதற்காக நீங்கள் சந்தா (பணம்) செலுத்த வேண்டி இருக்கும்!

ஆப்ஸ்

ஆண்ட்ராய்டு யூசர்களை பொறுத்தவரை, அவர்களுக்கு பல வகையான ஆட் பிளாக்கிங் ஆப்கள் அணுக கிடைக்கும்.

ஐஓஎஸ் யூசர்களுக்கு, டிவைஸை ஜெயில்பிரேக் செய்யாத வரை, சைட்லோடிங் செய்வது சாத்தியமே இல்லை. அதே போல, ஆட்-பிளாக்கிங் என்பது கூகுளால் சரியாக அங்கீகரிக்கப்படாத ஒரு நடைமுறை ஆகும். எனவே அது தொடர்பான அதிகாரப்பூர்வமான ஆப்களை நீங்கள் பிளே ஸ்டோரில் காண முடியாது.

சாப்ட்வேர்

லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் யூசர்கள், தொல்லை தரும் விளம்பரங்களை முடக்க ஆட் பிளாக்கிங் சாஃப்ட்வேரை பயன்படுத்தலாம்.

SHARE