வீட்டில் கஞ்சா வைத்திருந்த பிக் பாஸ் பிரபலம்.. வேறு வழக்கிற்காக வந்த போலீசிடம் வசமாக மாட்டினார்

30

 

பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டால் எந்த அளவுக்கு புகழ் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி தெலுங்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு பிரபலம் அடைந்தவர் youtuber ஷண்முக் ஜஸ்வந்த்.

அவர் 2021ல் பிக் பாஸில் கலந்துகொண்ட நிலையில் அதன் பிறகு வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடிக்க தொடனாகினார்.

அவரது சகோதரர் ஒரு பெண் உடன் 10 வருடமாக பழகிவிட்டு அதன் பின் ஏமாற்றி வேறொரு பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்திருக்கிறார்.

இது பற்றி ஏமாற்றப்பட்ட பெண் ஹைதராபாத் போலீசில் புகார் அளிக்க, அதை பற்றி விசாரிக்க அவர் வீட்டுக்கு சென்று இருக்கின்றனர்.

கஞ்சா
அங்கு சென்ற போலீசுக்கு ஜஸ்வந்த் கஞ்சா புகைத்துக்கொண்டிருப்பதை பார்த்திருக்கின்றனர். அவரது வீட்டை சோதனையிட்டு கஞ்சாவை கண்டுபிடித்து இருக்கின்றனர். அதன் பின் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணை ஏமாற்றிய அவர் சகோதரர் மீதும் 420 (Cheating) மற்றும் 376 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

SHARE