வீரம் படத்தில் அஜித்துடன் நடித்த யுவினாவின் தாயும் ஒரு நடிகை தானா.. சந்திரமுகி படத்தில் நடித்துள்ளாரா

29

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த படம் வீரம். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் நடிகை யுவினா பார்த்தவி. வீரம் படத்தின் மூலம் பிரபலமான யுவினா, தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

இதன்பின் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த யுவினா, சமீபத்தில் வெளிவந்த சைரன் படத்தில் ஜெயம் ரவியின் மகளாக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக பார்த்த யுவினாவா இது இப்படி வளர்ந்துவிட்டாரே என பலரும் கூறி வருகிறார்.

யுவினாவின் தாய்
இந்நிலையில், யுவினாவின் தாய் தேவி மகேஷ் என்பவரும் ஒரு நடிகை தானாம். குறிப்பாக அவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் விளம்பர படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 200 விளம்பர படங்களில் அவர் நடித்துள்ளாராம்.

இதுமட்டுமின்றி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தனது மகள் யுவினாவுடன் இணைந்து கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பர படங்கள் மட்டுமின்றி திரை படங்களிலும் நடித்துள்ளார். பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வெளிவந்த சந்திரமுகி 2 படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் யுவினாவின் தாய், தேவி மகேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE