வெகுவிரைவில் வவுனியா பொது வைத்தியசாலை மாகாண வைத்தியசாலையாக மாற்றப்படும் – ப.சத்தியலிங்கம்

509

P1140509

08.10.2014 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் வவுனியா பொதுவைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் தங்குவதற்கான தங்குமிட விடுதியொன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர் தியாகராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

சுகாதார பராமரிப்பு நிலையத்தில் 20 பேருக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களின் முயற்சியால் அமைக்கப்பட்ட இந் நிலையமானது முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்கள் தமது அன்றாட வாழ்க்கையினை இயல்பாக வாழக்கூடியவாறும் தொழில் முயற்சிகளில் ஈடுபடக்கூடிய வகையிலே அவர்களது தேக ஆரோக்கியத்தை ஏற்படுத்தி தமது குடும்பத்தவரை காப்பாற்றக்கூடியவர்களாக மாற்றுவதாகும்.

இத்தகைய சேவைகளை மேம்படுத்தி முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களை இனங்காணும் பட்சத்தில் தேவை கருதி ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்கப்பட உள்ளன.

   P1140509 P1140502

P1140487

P1140502

 

P1140495

படங்களும் தகவலும் :- இ.தர்சன்

SHARE