வெடித்துச் சிதறியது உலகப் புகழ்பெற்ற இத்தாலி எரிமலை !

39

 

உலகப் புகழ்பெற்ற இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலை வெடித்துச் சிதறி தீ குழம்பை கக்கி வருகிறது.

இதன் காரணமாக பனி போர்த்திய எட்னா எரிமலையில் சூடான நெருப்புக் குழம்பு ஆறாக பெருகி ஓடுகிறது. ரோம் நகரில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிசிலி தீவில் எட்னா எரிமலை அமைந்துள்ளது.

அதேவெளை கடல் மட்டத்தில் இருந்து 3,330 மீட்டர் உயரம் கொண்ட எட்னா எரிமலை அடிக்கடி வெடித்துச் சிதறுவது வழக்கம்.

மேலும் எரிமலை வெடிப்பினால் வரும் சாம்பல் மத்திய தரைக்கடல் பகுதி தீவில் கரை சேர்வது வாடிக்கையான சம்பவம் ஆகும்.

SHARE