வெடிபொருள் பார்சலால் பீதி: லண்டன் விமான நிலையம் மூடப்பட்டு, பின்னர் திறப்பு

382

லண்டன் அருகே பெட்போர்ட்சைர் என்ற இடத்தில் லுடா என்ற விமான நிலையம் உள்ளது. இங்கு பெரும்பாலும் சிறிய விமானங்கள் வந்து செல்லும்.

இந்த நிலையில் விமான நிலையத்தில் சந்தேகப்படும் நிலையில் மர்ம பார்சல் ஒன்று கிடந்தது. அது வெடிகுண்டு ஆக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் விமான நிலையத்தில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

உடனே விமான நிலையத்தில் இருந்த 1600 பயணிகள் வெளியேற்றப்பட்டனர். மேலும் விமான நிலையத்துக்கு வரும் அனைத்து ரோடுகளும் மூடப்பட்டன. அதனால் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.

இந்த பீதி நிலவியபோது 6 விமானங்கள் ஜப்தான் விமான நிலையத்தில் தரை இறங்க இருந்தன. அவை வேறு விமான நிலையத்துக்கு மாற்றி விடப்பட்டன. 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதற்கிடையே அங்கு அவசர சேவை குழுவினர் விரைந்து வந்தனர். ராணுவ வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இந்த மர்ம பார்சலை எடுத்து சென்று அதை வெடிக்க செய்து செயல் இழக்க வைத்தனர்.

அதை தொடர்ந்து பரபரப்பும், பீதியும் அடங்கியது. இந்த சம்பவத்தால் பல மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது. பலத்த சோதனைக்கு பிறகு மீண்டும் மாலை 6 மணிக்கு விமான நிலையம் திறக்கப்பட்டது.

SHARE