வெறும் காமெடி நடிகராக இருக்க விரும்பவில்லை – கருணாகரன்!

553

‘நெஞ்சுக்கு நீதி’ உள்ளிட்ட குறும்படங்களில் நடித்து வந்தவர் கருணாகரன். குறும்படங்களில் கலக்கி வந்தவர் பின்னர் பீட்சா, சூது கவ்வும், மாலை பொழுதின் மயக்கத்திலே போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த யாமிருக்க பயமே இவரை மேலும் பிரபலமாக்கியுள்ளது. இப்படத்தில் ஹீரோ கிருஷ்ணாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். கூடவே காமெடியிலும் கலக்கி இருந்தார். தற்போது யான், ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்து முடித்து இருப்பவர், அடுத்து உதயநிதியின் நண்பன்டா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிஸி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அவர் அளித்த பேட்டி இதோ… ”யாமிருக்க பயமே” படத்தில் எனது கேரக்டரை எல்லோரும் பாராட்டி பேசுறாங்க. இயக்குநர், எனக்காவே அந்த ரோலை உருவாக்கியது போன்று இருந்தது. இயக்குநர் டி.கே., எனக்கு கதை சொன்ன விதத்தை விட, அவர் எடுத்த விதம் தான் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. யாமிருக்க பயமே படத்தின் ஷூட்டிங்கை டில்லியில் நைநீட்டால் என்ற இடத்தில் படமாக்கினார்கள். காலை 7 மணியிலிருந்து 12 வரை தொடர்ந்து நடித்தேன். இந்தப்படத்திற்காக அதிகமாக உழைத்தேன். என் உழைப்புக்கான ரிசல்ட்டும் இப்போது கிடைத்து இருக்கிறது. திரையில் வெறும் காமெடி நடிகராக மட்டும் வந்து செல்லாமல், படம் முழுக்க நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருக்கணும் என்று விரும்புகிறேன். சின்ன ரோலாக இருந்தாலும், படத்தில் அந்த ரோல் எனக்கு வலுவானதாக இருக்க வேண்டும், என்று கூறினார்.
SHARE