வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்களுக்கான தூதுவர்கள், செயலாளர்கள், இராஜதந்திரிகள் அடங்கிய 11 பேர் கொண்ட குழு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று விஜயம்

566

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று சனிக்கிழமை காலை விஜயம் செய்த வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்களுக்கான தூதுவர்கள், செயலாளர்கள், இராஜதந்திரிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிட்டனர். வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்களுக்கான தூதுவர்கள், செயலாளர்கள், இராஜதந்திரிகள் அடங்கிய 11 பேர் கொண்ட குழு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்தது. இதில் நான்கு வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட 4 இராஜதந்திரிகள் அடங்குகின்றனர்.

இந்தக் குழுவில், சவூதி அரேபியாவுக்கான தூதுவர் முகமட் ஹுசைன் முகமட், ஆப்கானிஸ்தானுக்கான தூதுவர் மரிக்கார் பாவா, பிலிப்பைன்ஸுக்கான தூதுவர் பேராசிரியர் எஸ்.வி.டி.காமினி சேனாநாயக்க, சிசெல் நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் டி.ராஜித பியதிஸ்ஸ, சிட்னி, கெய்ரோ, டுபாய், அம்மான் ஆகிய நாடுகளுக்கான இராஜதந்திரிகளான செல்வி ஜாசர அபேநாயக்க, பி.கே.எம்.ஆர்.எஸ்.விஜேயரத்ன, டிலுக்சன் ஜெயசிங்க, பிரதீப் பி.மத்துமபண்டார ஆகியோர் அடங்குகின்றனர். அத்துடன், இராஜதந்திரிகள் கற்கைகள் கல்லூரி பணிப்பாளர எம்.ஆர்.கீகெல், திட்ட அதிகாரி செல்வி டேசானி மேகலா, உதவித்திட்டப் பணிப்பாளர் துமிந்த சுஜீவ ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள், மீள் குடியேற்ற செயற்பாடுகள், புனரமைப்பு, புனர்நிர்மாண வேலைத்திட்டங்கள், போன்றவைகள் தொடர்பாக அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுடன் கலந்துரையாடினர். அத்துடன் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி, பொருளாதார வேலைத்திட்டங்கள் குறித்து அரசாங்க அதிபரால் விளக்கமளிக்கப்பட்டது. அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய வீடமைப்பு வேலைத்திட்டம், மற்றும் கரடியனாறு விவசாயப் பண்ணை உள்ளிட்ட இடங்களையும் இவர்கள் பார்வையிட்டனர். Batti_ImpaserBatti_Impaser-01Batti_Impaser-02Batti_Impaser-03Batti_Impaser-04

SHARE