வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பில் புதிய ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன – யாஸ்மீன் சூகா

538

வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பில் புதிய ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன – யாஸ்மீன் சூகா

வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பில் புதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமை சட்டத்தரணியும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் உறுப்பினருமான யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார்.
இந்த புதிய ஆதாரங்கள் சர்வதேச சுயாதீன விசாரணைகளின் இன்றியமையா தன்மையை மேலும் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் என்ற அமைப்பினால் வெள்ளைக் கொடிச் சம்பவம் பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுளளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக, சிவிலியன் மற்றும் காவல்துறை முக்கிய தலைவர்கள் சரணடைந்த போது கொலை செய்யப்பட்டதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலைமையானது பாரியளவிலான சர்வதேச மனிதாபிமான சட்ட மீறலாகும் என சூகா குற்றம் சுமத்தியுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களின் அப்படையில் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் என்ற அமைப்பு புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.
அப்போதைய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹணேவினால் புலிகளுக்கு ஐரோப்பிய மத்தியஸ்தர் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட குறுஞ்செய்திகள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எவ்வாறு சரணடைவது என்பது பற்றி கொஹணே வழங்கிய அறிவுறுத்தல்கள் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்தி ஆதாரமாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேரில் கண்ட சாட்சியங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளைக் கொடி சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE