வெஸ்ட் இண்டீஸ்-இந்திய அணிகள் விளையாடும் கிரிக்கெட் மைதானங்கள்: பி.சி.சி.ஐ. அறிவிப்பு

509
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான மைதானங்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் சுற்றுப்பயண மற்றும் போட்டி அட்டவணை கமிட்டி இன்று ஆலோசனை நடத்தியது.இக்கூட்டத்தில், டெஸ்ட் போட்டிகளை நடத்த பெங்களூர், அகமதாபாத் மற்றும் ஐதராபாத் ஆகிய மைதானங்களும், ஒருநாள் போட்டிகளுக்கு கொல்கத்தா, விசாகப்பட்டினம், கட்டாக், தர்மசாலா மற்றும் கொச்சி ஆகிய மைதானங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் முதல் முறையாக சர்வதேச 20 ஓவர் போட்டி நடைபெறுகிறது.

போட்டிகள் நடைபெறும் சரியான திகதி மற்றும் போட்டி அட்டவணை பின்னர் வெளியிடப்படும்.

SHARE