ஸ்டெம்செல் விஞ்ஞானி வித்யாவும் நடிகையாகி விட்டார்.

570

மாடல்கள், டான்சர்கள், அழகி போட்டியில் வென்றவர்கள்தான் சினிமாவுக்கு வந்து கொண்டிருந்தார்கள். இப்போது விமான பணிப்பெண்கள், டாக்டர்கள், மாணவிகள், இளம் தொழிலதிபர்கள் என பல்வேறு துறைகளிலிருந்தும் நடிக்க வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் பிரபல தனியார் மருத்துவமனையில் ஸ்டெம்செல் விஞ்ஞானியாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் வித்யாவும் நடிகையாகி விட்டார். விஜய் இயக்கியுள்ள சைவம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
நடிக்க வந்தது பற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் ஸ்டெம்செல் விஞ்ஞானியாக இருந்தாலும் அடிப்படையில் நான் டான்சர். நிறைய டான்ஸ் புரோகிராம் பண்ணியிருக்கேன் அதை பார்த்துட்டு விருந்தாளி படத்தில் நடிக்க சான்ஸ் கிடைச்சுது. அதற்கு பிறகு சட்டப்படி குற்றம் படத்தில் நடிக்க சான்ஸ் வந்தது. அப்போ எனக்கு எக்ஸாம் இருந்ததால நடிக்க முடியல. கம்மத் அண்ட் கம்மத் மலையாளப் படத்துல மம்முட்டியின் மனைவியாக நடிச்சேன். அதுக்கு பிறகு ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கிட்டதால தொடர்ந்து நடிக்க முடியல.
இடையிடையே விளம்பர படங்கள்ல நடிச்சிட்டிருந்தேன். அதைப் பார்த்துதான் சைவம் பட சான்ஸ் கிடைச்சுது. ஸ்டிராங்கான பேமிலி உமன் கேக்டர். நடிக்கிறது நிறைய களம் இருந்திச்சு. அடுத்து தலகால் புரியல என்ற படத்தில் இதுவரை யாரும் நடித்திராத ஒரு வித்தியாமான கேரக்டரில் நடித்து வருகிறேன். தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் தொடர்ந்து ஆராய்ச்சியிலும் ஈடுபடுவேன். என்கிறார் வித்யா
SHARE