ஸ்மார்ட்போனை தொடர்ந்து பயன்படுத்தினாலும் 2 நாளைக்கு பேட்டரி தீராமல் இருக்க இதை செய்தால் போதும்

319

 

நீங்க தொடர்ந்து போனை நோண்டினாலும் பேட்டரி 2 ,3 நாளுக்கு தீராமல் இருக்க என்ன செய்யலாம்?

போனின் பேட்டரி வேகமாக ‘ட்ரை’ ஆவதற்கு மிகவும் வெளிப்படையான காரணங்களில் ஒன்று – அதிகப்படியான டிஸ்பிளே ப்ரைட்னஸ்! ஆகவே ப்ரைட்னஸை குறைத்து வைத்து போனை இயக்கினால் பேட்டரியை மிச்சப்படுத்தலாம்.

நீங்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் கூட சில ஆப்கள், பேக்கிரவுண்டில் வேலை செய்துகொண்டே தான் இருக்கும்! எடுத்துக்காட்டிற்கு விபிஎன், ஆன்டி-வைரஸ், ஹெல்த் மற்றும் காலெண்டர். இதன்மூலம் விரைவில் பேட்டரி டவுன் ஆகும்.

ஸ்மார்ட்போனை தொடர்ந்து பயன்படுத்தினாலும் 2 நாளைக்கு பேட்டரி தீராமல் இருக்க இதை செய்தால் போதும் | Smartphone Mobiles Battery Issues Technology Tamil

இரவு நேரங்களில் கூட மொபைல் டேட்டாவை அல்லது வைஃபை கனெக்க்ஷனை ஆப் / டிஸ்கனெக்ட் செய்யாமல்.. 24 மணி நேரமும் ஆன்லைனில் / இண்டர்நெட்டில் இருக்கும் வழக்கத்தை பலரும் கொண்டுள்ளோம். இதை மாற்றி கொண்டால் பேட்டரி சிறிது தப்பிக்கும்.

சில நேரங்களில், இது உங்கள் போனின் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவதற்கு பின்னால் ஆப்களோ அல்லது செட்டிங்ஸோ இருக்காது; அந்த போனின் பேட்டரியே முக்கிய காரணமாக இருக்கலாம்! அதாவது உங்கள் மொபைலின் பேட்டரி பழையதாகி இருக்கலாம்.

SHARE