ஸ்ரீ சபாரதத்தினத்திற்குஅஞ்சலி செலுத்த முடியுமாயின் ஏன் புலிகளுக்கு அஞ்சலிசெலுத்த முடியாது?

536

images (8)

தமிழரின் உரிமைப் போராட்டத்துக்கு களமிறங்கிய இயக்கங்களில் டெலோவும் ஒன்றாகும் பல தீவிர போராளிகளைக்கொண்ட அமைப்புக்களில் இதுவும் ஒன்று எபதை யாரும் மறுக்க முடியாது .ஆயினும் தலைமை தாங்கியவர்களின் ஒழுக்கமும் பதவி மோகம் கொண்ட சிலரினது செயல்பாடுகளும் அந்த இயக்கத்தினுள் பல உட்கொளைகளும் சமூக விரோத செயல்களாலும் நடைபெற்று சீரழிந்ததை தொடர்ந்துஸ்ரீ சபாரத்தினம் புலிகளால் கொலை செய்யப்பட்டதுடன் கட்சித்தலமைக்கான குத்து வேட்டுக்கள் நடைபெற்று யாழ்பாணத்துக்கு வெளியில் ஒருதமிழ் அரசியல் கட்சிக்கு தலைவர் தெரிவாக ஒரு சிறுவர் போராளியாக அரசியல் பின்புலமற்ற குடும்ப பின்னணியில் இருந்து செல்வம் அடைக்கலநாதன் தலைவரானார் இவரது தலைமையை மனதார ஏற்க மறுத்த பலர் இன்றும் இவ்வமைப்பில் தங்களது சொந்த நலனுக்காக ஒட்டிக்கொண்டு இருக்கின்றனர்.

இன்று தமிழ் தேசியக் கூ ட்டமைப்பில் இணைந்து இக்கட்சி செயல்படுவதனால் இன்றைய கள சுழலுக்கு அமைவாக தவர்கள் தமிழ் தேசியம் பேசினாலும் அடிப்படை செயல்பாட்டில் இவர்கள் தமது தகிடு தத்தங்களை நிறுத்தவில்லை இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துவது அரசுக்கு எதிரானது என்று இலங்கை அரசு கடுமையான தடைகளை விதித்துள்ள சுழலில் புலிகளால் கொல்லப்பட்ட ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28வது நினைவு தினம் மட்டக்களப்பு மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றுள்ளது. அப்படியானால் புலிகளுக்கும் தமிழருக்கும் எதிரான நிகழ்வுகளுக்கு அரசு ஆதரவு தெரிவிக்கின்றது என்றே பொருள்படும்

இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதரதலிங்கம், கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம், மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எஸ்.குணசேகரம், மாவட்ட உப செயலாளர் எஸ்.சற்குணராஜா, கட்சியின் மூத்த உறுப்பினர்களான எஸ்.ஞானப்பிரகாசம், எஸ்.தேவராஜா மற்றும் கட்சி அங்கத்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

ஆனாலும் கட்சியில் தளமைப்பதவிக்காக பல்வேறு சதிவேலைகளை முன்னெடுக்கும் தீவிர தேசிய வாதியாக செயல்படும் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் கலந்துகொள்ளவில்லை அதற்கு வடக்கு மாகாண சபையில் அமைச்சு பதவி தனக்கே தரவேண்டும் என்று கட்சியில் தானே தீர்மாணம் கொண்டுவந்து சலசலப்பை ஏற்படுத்தியமை தொடர்பாக முரண்பாடு என்றே சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்வை பிரமாண்டமாக செய்ய வேண்டும் புலிகளுடனான எதிர்ப்பை தந்திரமாக பதிவு செய்யவேடும் அதற்கான அரசின் ஆதரவினை தானே பெற்றுத்தருவதாக மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பரும் கிழக்குமாகாணசபை உறுப்பினருமாகிய கோவிந்தம் கருணாகரன் என்ற ஜனாவே முன்னின்று செயல்படுட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன மட்டக்களப்பு மாவட்டத்தில் டேலோவினால் செய்யப்பட்ட தமிழர் விரோத செயல்ப்பாடுகளில் கணிசமானபங்கு ஜனா அவர்களுக்கு உண்டு என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

புலிகளின் தண்டனைக்கு பயந்து பிறேமதாசாவிடம் சரணடைத ஜனா அவர்கள் பிரேமதாச அரசின் உதவியுடன் பிரித்தானியாவுக்கு சென்று அங்கிருந்து புலிகளுக்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபட்டதனால் ராஜபக்சவின் அன்மடிப்பைப் பெற்று இலங்கை வர முடிந்த்தது பல கல்விமான்களும் துறைசார் நிபுணர்களும் தமிழர் என்ற காரணத்தினால் இலங்கை வரவோ பொதுப்பணிகளில் ஈடுபடவோ முடியாத இக் காலகட்டத்தில் முன்னை நாள் ஆயுத போராட்ட போராளி ஒருவர் தமிழ் தேசிய அரசியலில் சுதந்திரமாக ஈடுபட முடியும் என்றால் அதன் பின்னணி பற்றி யாரும் சந்தேகப்படத் தேவையில்லை இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே …….

அதே போன்று ஸ்ரீ டெலோ என்று ஒரு அமைப்பும் ஸ்ரீ சபாரத்தினத்துக்கு அஞ்சலி தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இந்த அமைப்பு வெளிப்படையாக கோத்தபாய ராஜபக்சவின் கீழ் இயங்குகிறது இதன தலைவரும் சமூகவிரோத பின்னியில் தண்டனைக்கு பயந்து நோர்வே நாட்டுக்கு சென்றவர் இவர் ஈ பி டி பி யின் உதவியுடன் இலங்கை திரும்பி அரசுடன் இணைந்து செயல்படுபவர் இவரும் அவ்வப்போதோ டெலோவின் நிகழ்வுகளில் மேற்படி உறுப்பினர்களான சிவாஜிலிங்கம்,  வினோ, நோதரதலிங்கம், ஜெனா, பிரசன்னா போன்றவர்களுடன் கலந்து கொள்கின்றவர் ஆனாலும் இரகசியமாகவே இவை நடைபெறும் ஆனாலும் சில ஊடாக வியலாளர்கள் ஆதாரத்துடன் நிருபித்துள்ளனர்
இன் நிகழ்வில் கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதரதலிங்கம் ஆகியோரால் திருவுருப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கட்சியின் உப தலைவர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுமான பிரசன்னா இந்திரகுமார், கோ.கருணாகரம் ஆகியோரால் திருவுருப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூறப்பட்டதுடன், நினைவுப் பேருரையும் இடம்பெற்றது.

அங்கு பேசிய அடைக்கலநாதன் விநோதரதலிங்கம் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மக்களின்  நிலமை  கொண்டு விட்டுக்கொடுப்புக்களுக்கு முன்வரவேண்டும் என் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் தற்போது தமிழ் தேசி்யக் கூட்டமைப்புக்கு பலர் உரிமையாளர்களாக தம்மை காட்டிக்கொண்டாலும் கூட்டமைப்பு கிழக்கின் ஊடகவியலாளர்கள் சிலரின் அயராத உழைப்பால் உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.telo 1telo 2telo 4telo 5telo 6telo 7

SHARE