ஸ்லிம் தேக ரகசியத்துக்கு காரணம் சொல்கிறார் காஐல்.

400
ஒல்லி தேக ரகசியம் காஐல் சொல்கிறார்

ஸ்லிம் தேக ரகசியத்துக்கு காரணம் இருக்கிறது என்றார் காஜல் அகர்வால். இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிப் படங்களில் நடித்துவருகிறேன்.

இதனால் கவர்ந்திழுக்கும் உடற்கட்டை ஸ்லிம்மாக பராமரிக்க வேண்டி இருக்கிறது. எப்போதுமே ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதால் சைவ உணவையே சாப்பிடுகிறேன்.

தொடர்ச்சியாக யோகா பயிற்சியும் செய்கிறேன். அவுட்டோர் ஷூட்டிங் செல்ல வேண்டி இருந்தால் அங்குபோய் இருப்பதை சாப்பிட்டுவிட்டு பின்னர் அவதிப்படுவதை நான் விரும்புவதில்லை.

எங்காவது செல்வதாக இருந்தால் கையில் சில சாமான்களையும் எடுத்துக்கொள்வேன். அப்போது யாரையும் எதிர்பார்க்காமல் நானே எனக்கு ஏற்றபடி சமைத்து சாப்பிடுவேன்.

இதுதவிர வாரத்தில் 3 நாள் தவறாமல் யோகா செய்துவிடுவேன். மற்ற நாட்களில் வெயிட் தூக்கி பயிற்சி செய்கிறேன். இதுதான் எனது ஸ்லிம் தோற்றத்தின் ரகசியம். இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

 

SHARE