ஹன்சிகாவா?இது நம்ம ஆளு படத்தில்

415

சிம்பு, நயன்தாரா காதலித்த கதையும், பின் அவர்கள் இருவரும் பிரிந்த கதையும் நமக்கு தெரியும். இப்போது இவர்களின் காதல் கதை வைத்துதான் இது நம்ம ஆளு படத்தின் கதை நகர்கிறதாம்.

அதோடு, இடையினில் புகுந்த ஹன்சிகாவின் காதலையும் படத்தில் சொல்லியிருக்கிறார்களாம்.

இது நம்ம ஆளு படத்தின் டீஸரில் கூட உங்களுக்கு யாரை பிடிக்கும்? என்று நயன்தாரா, சிம்புவைப் பார்த்து கேட்க, உன்னை மட்டும்தான் பிடிக்கும் என்று அவர் சொல்வார்.

அதற்கு இதே பதிலை எத்தனை பேர்கிட்டதான்டா சொல்லுவே என்று சூரி ரிப்பீட்டு அடிப்பார்.

அடுத்து, நயன்தாரா, அந்த பொண்ணுக்கும் உங்களுக்கிடையே எதற்காக லவ் பிரேக் அப் ஆனது? என்று கேட்பார். (ஹன்சிகாவ கேட்கிறாங்க)

இதற்கு சிம்பு பதில் சொல்ல முடியாமல் தவிக்க, மாட்னான்டா சிலம்பரசன் என்று சூரி கமெண்ட் கொடுப்பார்.

ஆக ஹன்சிகாவின் காதலையும் இப்படத்தில் கூறியிருக்கின்றனர்.

அப்ப தன்னோட சொந்த பணத்துல சொந்த கதையில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிம்பு.

 

SHARE