ஹமாஸ் தரப்பினரால் பணய கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 பேர் விடுவிப்பு

53

 

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தரப்பினருக்கும் இடையிலான நான்கு நாட்கள் தற்காலிக போர் நிறுத்த இணக்கப்பாட்டுக்கு அமைய, ஹமாஸ் தரப்பினரால் பணய கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 பேர் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 13 இஸ்ரேலியர்களும், 10 தாய்லாந்து பிரஜைகளும் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக மத்தியஸ்த்த நடவடிக்கையில் ஈடுபடுகின்ற கட்டார் தெரிவித்துள்ளது.

விடுவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குகின்றனர்.

அதேநேரம் குறித்த இணக்கப்பாட்டுக்கு அமைய இஸ்ரேலினால் கைது செய்யப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களில் 39 பேர் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

24 பெண்களும், 15 சிறுவர்களும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE