ஹீரோ ஆன நாகேஷ் பேரன் 

341
சென்னை: நடிகர் நாகேஷ் பேரன் ஹீரோவாக அறிமுகமாகிறார்.கறுப்பு வெள்ளை முதல் கலர் பிலிம் காலம்வரை 5 தலைமுறை நடிகர்களுடன் நடித்திருப்பவர் நடிகர் நாகேஷ். இவரது மகன் ஆனந்த்பாபுவும் ஹீரோவாக பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவரது மகனும், நாகேஷ் பேரனுமான கஜேஷ் ‘கல்கண்டு என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏ.எம்.நந்தகுமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தென்னவன், ஜாம்பவான் படங்களை இயக்கியவர். படம் பற்றி அவர் கூறியதாவது:

நகைச்சுவை நடிகர் நாகேஷ், ஹீரோ ஆனந்த்பாபு என இருவரின் நடிப்பு திறனும் ஒருங்கே அமையப் பெற்றவராக கஜேஷ் இப்படத்தில் அறிமுகமாகிறார். கேமரா முன் நிற்பதற்கு முன் முறைப்படி 2 மாதங்கள் நடிப்பு, நடனம், ஸ்டன்ட் பயிற்சி எடுத்துக்கொண்டார். ஹீரோயினாக டிம்பிள் சோப்டே அறிமுகமாகிறார். இவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர். மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், ஸ்ரீரஞ்சனி, ஜெனிபர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கே.வி.சுரேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜே.மகாலட்சுமி தயாரிக்கிறார்.  இப்படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. சென்னை, நாகர்கோவில், காரைக்குடி போன்ற இடங்களில் ஷூட்டிங் நடக்கிறது. இவ்வாறு இயக்குனர் நந்தகுமார் கூறினார்

 

SHARE