அனுஷ்காவுடன் இணைகிறார் திரிஷா 

430

 

அனுஷ்காவுடன் இணைந்து நடிக்கிறார் திரிஷா. விஷ்ணுவர்தன் இயக்கிய பில்லா படத்தில் நடித்த அஜீத் பின்னர் பில்லா 2-ம் பாகத்திலும் நடித்தார். இதையடுத்து ஆரம்பம், வீரம் படங்களில் நடித்தார். தற்போது கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இதுபற்றி பட இயக்குனர் கவுதம் மேனன் கூறும்போது,சூர்யா படம் இல்லை என்றதும் சிம்புவை வைத்து படம் இயக்க எண்ணினேன். அப்போது அஜீத் போன் செய்து, உங்க ஸ்டைல் படத்துல நடிக்கவேண்டும் கதை தயார் பண்ணுங்க என்றார்.

ஒரு மாதத்தில் கதை தயார் செய்து ஓ.கே. வாங்கி ஷூட்டிங் கிளம்பிவிட்டேன். படத்தில் எதிர்பாராத ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். பஞ்ச் டயலாக் எதுவும் வைக்க வேண்டாம் என்று அஜீத் கூறி விட்டார். இப்படம் ரிலீஸ் ஆன பிறகு 2ம் பாகம் எடுக்கும் எண்ணமும் இருக்கிறது. அனுஷ்கா, திரிஷா இதில் நடிக்கின்றனர் என்றார். ஏற்கனவே அஜீத், கவுதம் மேனன் படங்களில் பணியாற்றி இருக்கும் திரிஷா இப்படத்தில் நடிப்பதுபற்றி கூறும்போது,‘மீண்டும் எனக்கு பிடித்தவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன் என்றார்

 

SHARE