விஷால்-சுருதிஹாசன் நடிக்கும் பூஜை படம் குடும்ப சென்டிமெண்ட்- ஆக்‌ஷன் கலந்த படம்- டைரகடர் ஹரி

587

 

பூஜை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஷால். அதுவும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறாராம்.தமிழகத்தில் உள்ள என்கவுண்டர் ஸ்பெஷலிஸ் போலீஸ் அதிகாரிகளிடம் நேரில் சென்று அவர்களது அனுபவத்தை கேட்டு தெரிந்து வருகிறார் விஷால். இந்த கேரக்டருக்காக மிகவும் சிரமப்பட்டு இயல்பாக நடிக்க முயற்சி செய்வதாக கூறுகிறார்.

இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கோயமுத்தூர் பெண்ணாக நடிக்கிறார்.

கோவை 100 அடி ரோட்டில் உள்ள கங்கா, யமுனா, காவேரி தியேட்டரில்  பூஜை பட சூட்டிங் நடந்து வருகிறது.

சூட்டிங்கில் நடிகர் சத்தியராஜ் மற்றும் நடிகை ஐஸ்வர்யா தியேட்டரில் இருந்து வெளியே வருவது போலவும், சத்யராஜ் மற்றும் ஐஸ்வர்யாவை வில்லன்கள் தாக்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சியில் நடிகர் சத்தியராஜ் போலீஸ் வேடத்தில் தோன்றினார்.

இப்படம் குறித்து  டைரக்டர் ஹரி கூறியதாவது:-

பூஜை படம் என்னுடைய 13-வது படம். இந்த படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாகவும், நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாகவும், நடிக்கிறார்கள். இதில் சத்யராஜ், ஐஸ்வர்யா, சித்தாரா, கவுசல்யா உள்பட பல நடிகர்- நடிகைகள் நடிக்கிறார்கள். இந்தப் படம் குடும்ப சென்டிமெண்ட்- ஆக்ஷன் கொண்ட படம்.

படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் படமாக்கப்படுகிறது. இதன் பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இது கோவையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் குடும்ப சென்டிமெண்ட் கலந்த ஒரு ஆக்ஷன் படம். என்று கூறினார்.

SHARE