அகலவத்தை – பதுரலிய வீதியில்இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி

132

 

பதுரலிய வீதியில் ஜீவராணி சந்திக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மற்றுமொரு இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த அகலவத்தை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சாமிக்க லக்ஷான் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் அகலவத்தை பகுதியிலிருந்து பதுரலிய வீதியில் பதுரலிய நோக்கி இரவு பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

SHARE