இந்தியாவில் உள்ள கனடியர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனடிய அரசாங்கத்தினால் புதிதாக பயண அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சீக்கிய மதத் தலைவரான ஹார்டீப் சிங் நிஜார் படுகொலை தொடர்பில் இந்தியாவிற்கும், கனடாவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் கனடாவிற்கு எதிராக இந்தியாவில் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம் இந்த பயண அறிவுறுத்தல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்தியாவும் கனடாவிற்கான பயணங்கள் தொடர்பில் பயண அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தது.