கனடா பிரதமரின் பாதுகாப்புக் குழுவில் இருந்த அதிகாரி ராஜினாமா

110

 

சட்டவிரோத பணிகளைச் செய்ய விரும்பவில்லை என்பதால் கனடா பிரதமரின் பாதுகாப்புக் குழு பணியை ராஜினாமா செய்வதாக அக்குழுவின் அதிகாரி கார்போரல் புல்போர்ட் கூறியுள்ளார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை
கனடாவில் வசித்து வந்த சீக்கிய குருத்வாராவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில் எதிரொலித்து, கனடா மற்றும் இந்தியா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

நிஜ்ஜாருக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் உள்ள தொடர்பு பற்றி, இந்தியா பல ஆண்டுகளாக கனடாவை தொடர்பு கொண்டு அதுபற்றிய விவரங்களை பகிர்ந்து வந்துள்ளது.

அதன் பின்னர் 2018-ம் ஆண்டில் ட்ரூடோவுக்கு, இந்தியா அனுப்பிய தேடப்படும் நபர்களின் பட்டியலில் நிஜ்ஜார் பெயர் இடம் பெற்றது. பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகளுக்கு பின்னர், 2020-ம் ஆண்டு அவரை பயங்கரவாதியாக இந்தியா அறிவித்தது.

பின் 2022-ம் ஆண்டு, பஞ்சாப்பில் பயங்கரவாத பரவலுடன் தொடர்புடைய வழக்குகளில் அவரை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி பஞ்சாப் போலீசார் கேட்டு கொண்டனர். இந்த சூழலில் நிஜ்ஜார் கொல்லப்பட்டார்.

இந்தியா – கனடா இடையே மோதல்
இந்த சம்பவத்தில் இந்தியாவின் மீது கனடா பிரதமர் ட்ரூடோ குற்றச்சாட்டு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்தியா – கனடா இடையேயான மோதல் போக்கினால் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், கனடா பிரதமரின் தனி பாதுகாப்புக் குழு அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கார்போரல் புல்போர்ட் என்ற அந்த அதிகாரி, நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது,

இது நிச்சயமாக திட்டமிட்டு எடுத்த முடிவு அல்ல என்று கூறியுள்ளார். மேலும் பாதுகாப்புப் குழு அதிகாரியின் கடமைகள் என்னென்ன என்பது குறித்து சட்டங்களைப்பற்றி ஆராய்ந்த பின்பு இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவும் புல்போர்ட் கூறியுள்ளார்.

SHARE