சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு விழா

145

இன்றைய தினம் (25.9.2023) வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர் சமூகம் இனணந்து, அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு விழாவை சிறப்பாக நடத்தினர்.

கடந்த 16,17,18 .09.2023 ஆகிய தினங்களில் பொலன்னறுவை ராஜகிரிய வித்தியாலயத்தில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் சாதனை படைத்த மாணவிகளையும் அவர்களின் பயிற்றுவிப்பாளர் ஞா.ஜுவன் அவர்களையும் இவர்களின் பொறுப்பாசிரியர்களான திருமதி J.D ரெஜினோல்ட், திருமதி அகிலா, திருமதி நடோஜினி ஆகியோரையும் பாராட்டும் விதமாக இந் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இதனை ஒழுங்கமைத்து நடாத்திய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி மரிய டெய்சி செபமாலை அவர்களுக்கும், பிரதி அதிபர் திரு.ஸ்ரீரங்கநாதன் ஆசிரியர் மற்றும் பாடசாலை சமூகத்தினர் மற்றும் இவர்களை பயிற்றுவித்த ஞா.ஜுவன் அவர்களுக்கும், இவர்களின் பொறுப்பாசிரியர்களான, திருமதி J.D ரெஜினோல்ட், திருமதி அகிலா, திருமதி நடோஜினி அவர்களுக்கும், தினப்புயல் பத்திரிகை சார்பாக நன்றிகளையும், சாதனை படைத்த மாணவிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

SHARE