தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்கள்: இந்திய அணியின் வீரர்கள் பட்டியல்

152

 

டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அணி அறிவிப்பு
உலக கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்நிலையில் இதற்கான இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இந்த முறை மூன்று வகையான போட்டிகளுக்கு 3 கேப்டன்கள் உடன் தென் ஆப்பிரிக்கா செல்ல உள்ளது.

டி20 அணி
கேப்டன் சூர்யகுமார் யாதவ், துணை கேப்டன் ஜடேஜா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ், திலக் வர்மா, ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.

ஒருநாள் அணி
கேப்டன் கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர்), ருதுராஜ், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், தீபக் சாஹர், ஆவேஷ் கான்.

டெஸ்ட் அணி
கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ், இஷான் கிஷான், கே.எல் ராகுல், அஸ்வின், ஜடேஜா, ஷர்துல், சிராஜ், ஷமி, முகேஷ், பும்ரா, ப்ரஷித்.

SHARE