புதிய வீடியோ வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு

116

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 29ம் திகதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய வீடியோவை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கவர்ந்துள்ளது. டிரைலர் வெளியாக இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் இந்த வீடியோ வெளியாகி இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

maalaimalar

SHARE