2015 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை வரும் ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பிக்கப்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது

443

 

2015 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை வரும் ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பிக்கப்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 2015 நவம்பர் 7 ஆம் திகதி நாட்டின் வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.

இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே நிதி அமைச்சர் என்ற ரீதியில் சமர்ப்பிப்பார். இம்முறை வரவு – செலவுத் திட்டம் மனித வளத்தை மேம்பாடடையச் செய்வதை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என திறைசேரியின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வரவு – செலவுத் திட்டத்தில் கல்வி, சுகாதாரம் போன்ற நலனோம்பு விடயங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு நிதி ஒதுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வேலை வாய்ப்பு, சுயதொழில் முயற்சி, தொழில் பயிற்சி என்பவற்றுக்கும் தொழில்நுட்ப திறன் அபிவிருத்தி, மூன்றாம் நிலை கற்கைககளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வரவு – செலவுத் திட்டம் நிதியமைச்சரான மஹிந்த ராஜபக்‌ஷவினால் தொடர்ச்சியாக 10 ஆவது தடவையாக சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE