வெள்ளை கொடி விபகாரத்தில் சிக்கப்போவது சரத்பொன்சேகாவா?மகிந்தவா?

971

pulithevan-jvpnews1 (1)

தமிழீழ விடுதலைபுலிகளின் அரசியல் துறை பொறுப்பாளரும் சமாதான செயலகத்தின் பணிப்பாளருமான புலித்தேவன் உட்பட்ட நானூறுக்கு மேற்பட்ட போராளிகள் வெள்ளை கொடி தாங்கியபடி இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர்.

சரண் அடைந்த இவர்களை இராணுவம் பலத்த சித்திரவதைகளின் பின்னர் அடித்தும் சுட்டு கொலை செய்ததுஇதில புலித்தேவனின் உடலில் தீயால் சூடுவைக்க பட்ட தடயங்கள் காணபடுகின்றன. தொப்பலங்கள் போட பட்ட நிலையில் காயங்கள் காணப்படுகின்றன.

pulithevan-jvpnews1 (1)

நிகங்கள் பிடுக்க பட்டு உடல் எல்லாம் கத்தியால் கீறி கிழிக்க பட்டு பின்னர் உடல்களில் நெஞ்சின் மேல் ஒயில்கள் ஊற்றி எரிக்க பட்ட நிலையில் அவர்களது உடலங்கள் காணபடுகின்றன. இவர்கள் சரண் அடைந்த பின்னரே சித்திரவதைகளின் பின்னர் கொலை செய்ய பட்டனர் என்ற தெளிவான பல நிமிடங்கள் அடங்கிய காணொளி உள்ளது. இவை உரிய வேளை வரும் போது அதாவது மகிந்தவினது ஆட்சி முடியும் வேளை இலங்கையில் பிறிதொரு ஆட்சி அதிகாரம் கைமாறும் வேளை பலத்த முக்கிய அதிர்ச்சி காணொளிகள் வெளியாகும் என அடித்து கூறபடுகிறது.

nadesan-jvpnews2 (1)

அவ்வேளை தான் ஐநாவில் பாரிய இலங்கையின் இன படு கொலைக்கு எதிரான பலவிடயங்கள் அரங்கேறும் எனவும் அப்போதே இவை பெரிதும் உதவும் என்பதால் இவர்கள் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் இதுவரை வெளிவந்த காணொளிகள் உலக தமிழர்களை நிலை குலைய வைத்துள்ளது என்பதே வரலாறாக பதிவாகியுள்ளது.

ஈழத்தில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், ‘காணாமல்போன எங்கள் உறவுகள் எங்கே?’ என்ற கேள்வி மட்டுமே மக்களிடம் எஞ்சியிருக்கிறது. கூட்டுக் கொலைகளுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும், கடத்தலுக்கும், சாட்சிகளாக நின்ற ஈழ மக்கள் பேசவே அஞ்சும் நிலை இன்று. விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், திரிகோணமலை அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் இருந்து இறுதிப் போரில் சரணடைந்து காணாமல்போனவர் தளபதி எழிலன். இவருடைய மனைவி ஆனந்தியின் போர் வாக்குமூலம் இது…

”2009 ஜனவரியிலிருந்து ஒரு நாள், ஒரு மணி நேர இடைவெளிகூட இல்லாமல் ஷெல்லடி நடந்தது. ஒரு சின்ன இடைவெளியைக் கொடுத்தால்கூட, புலிகள் சுதாரித்துக்கொள்வார்கள் என்று எதுபற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து தாக்கிக்கொண்டே வந்தது ராணுவம். மழையாகப் பொழிந்த ஷெல்களுக்கு நடுவே கிடைத்த சின்னச் சின்ன இடைவெளிகளுக்கு மத்தியில் அங்குலம் அங்குலமாக நாங்கள் நகர்ந்தோம்.

தர்மபுரம் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை செல்லும் வழியெல்லாம் ஷெல்லடியில் மக்கள் செத்து விழுந்தார்கள். பல தாய்மார்கள் தங்களின் இறந்த குழந்தைகளை அங்கேயே புதைத்துவிட்டுக் கடந்தார்கள். முதிர்ந்தவர்களை அப்படியே கைவிட்டுச் சென்றார்கள். கரியா முள்ளிவாய்க்கால், வெள்ளா முள்ளிவாய்க்கால், கப்பல் ரோட், வட்டுவாகலை அண்டிய பிரதேசங்களில் மே மாதம் 11-ம் தேதி தொடங்கி நடந்தது ரத்த அழிவுதான்.

நாங்கள் நகர்ந்த இடங்களில் இருந்த மரங்களில்கூடச் சிதைந்த உடல்கள் தொங்கின. விஷக் குண்டுகள் விழுந்த இடத்தில் அது ஆக்சிஜனை இல்லாமல் செய்ய, மூச்சுத் திணறி இறந்தவர்கள் பலர். அந்தக் குண்டு வீசப்பட்ட இடங்களைச் சுற்றிப் பல மைல்களுக்கு அதனுடைய பாதிப்பு பயங்கரமாக இருக்கும். தொண்டை எல்லாம் வறண்டுபோகும். காயம் அடைந்து சிகிச்சை கிடைக்காமல், ரத்தமிழந்து, கொஞ்சம் கொஞ்சமாகச் சாகிறோம் என்று தெரிந்தே இறந்தவர்களின் நிலைதான் மிகவும் கொடூரம்.

இதையெல்லாம் பார்த்த புலிகள் கையறு நிலையில் மக்களை அவர்கள் வழியில் செல்லுமாறு அனுப்பினார்கள். ஆனால், ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல முயன்ற மக்களும் கொல்லப்பட்டார்கள். எங்கும் செல்ல முடியாமல் மக்கள் அந்தச் சிறிய பகுதிக்குள் சிக்கி மடிந்தார்கள். மே 15-ம் தேதி எங்களின் முடிவு நெருங்கியிருந்தது.

எங்களைக் காப்பாற்ற இந்தியா வருகிறது, அமெரிக்காவின் பசிபிக் பிராந்தியத் தளபதி வரப்போகிறார். ஐ.நா-வின் மேற்பார்வையில் புலிகள் சரணடைவார்கள். மக்கள் விடுவிக்கப்பட்டு வீடுகளுக்குச் செல்வார்கள் என்ற பேச்சு மக்களிடம் பரவி ஒரு நம்பிக்கையாக விரிந்து இருந்தது.

புலிகளுக்கு அந்த வாக்குறுதி இந்தியா சார்பிலும், மேற்குலகத்தின் சார்பிலும் வழங்கப்பட்டிருந்தது. எழிலன் என்னிடம் வந்து, ‘நீ பிள்ளைகளை அழைச்சுக்கொண்டு ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போய் சரண்டர் பண்ணு. நான் வர்றேன்’ என்றார். போர் அநேகமாக முடிவுக்கு வந்திருந்தது. தூரத்தில் ஒலிக்கும் வெடிச் சத்தங்களைத் தவிர, எதுவுமே எஞ்சி யிருக்கவில்லை. ஆயுதங்கள் யாவும் புலிகளால் அமைதியாக்கப்பட்டன.

நானும் என்னோட மகள்களும் பிற சனங்களும் வட்டுவாகல் வழியாக வெளியேறி 17-ம் தேதி இரவு செல்வபுரம் வந்தோம். அங்கே ஒரு மரத்தடியில் ஏராளமான சனங்கள் அமர்ந்திருந்தனர். புலிகளின் பிரதானத் தளபதிகள் பலர் குடும்பம் குடும்பமாக அவர்களுடன் இருந்தார்கள். அரசியல் துறைத் துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தை களோடும், தளபதி இளம்பரிதி மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியோடும், மஜீத் என்ற தளபதி இரண்டு குழந்தைகள் மற்றும் தளபதியோடும், பிரியன் அவருடைய மனைவி குழந்தைகளோடும், மனைவியை ஏற்கெனவே இழந்த ராயா அவரது குழந்தைகளோடும் அமர்ந்திருந்தனர்.

இதுபோல எண்ணற்ற போராளிக் குடும்பங்களைக் கண்டதும் என் கணவர் எழிலனை அழைத்து வரலாம் எனத் திரும்பியபோது, சில பொடியள் வந்து ‘நாங்கள் அழைத்துவருகிறோம் அக்கா’ என்று சொல்லி அழைத்துவந்தார்கள். மிகவும் சோர்ந்து போய் வந்த எழிலன் என்னோடு எதுவும் பேசவில்லை. தலை குனிந்தபடி அமர்ந்திருந்தார்.

பின்னர், ‘நாங்க தாயகத்துக்காகப் போராட வெளிக்கிட்டு பூஜ்ஜியம்கூட இல்லை. மைனஸில் வந்து நிக்கிறோம்’ என்றபடி மீண்டும் தலை குனிந்துகொண்டார். சமாதானக் காலத்தில் சரிக்குச் சமமாக ராணுவத்தோடு நின்ற தலைவர்கள் எல்லாம் பிணையக்கைதிகளாகி தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார்கள். அந்த இரவை அப்படியே கழித்தோம்!” என்று நிறுத்திக்கொண்டு அந்த நினைவுகளில் மூழ்கியவர் சின்ன இடை வேளைக்குப் பிறகு தொடர்ந்தார்.

”புலிகளின் மூத்த தலைவர்களான புதுவை இரத்தினதுரை, பாலகுமார், பேபி எனப்படும் இளங்குமரன், யோகரத்தினம் எனப்படும் யோகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களோடு பிரான்சிஸ் ஜோசப் என்ற அடிகளாரும் அங்கேதான் இருந்தார்.Fr.-Francis-Joseph-2

பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் உண்மையிலேயே ஒரு தியாகியைப் போல வன்னி மக்களுக்காக வாழ்ந்தார். எமது பிள்ளைகளின் கல்வியறிவுக்கு அவர் ஆற்றிய தொண்டு அளவிட முடியாதது. தோல்வியைத் தழுவுகிறோம் என்று தெரிந்தபோது புலிகள் அவரைப் பத்திரமாக படகில் அனுப்பிவைக்க முடிவெடுத்தபோதுகூட, மக்களைவிட்டு விலகிச் செல்ல மறுத்து, பிடிவாதமாக மக்களோடு நின்றார். அந்த இரவில் அவரும் எங்களோடு நின்றார்.

அவருக்கு தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகள் தெரியும் என்பதால், ராணுவத்துடனான தொடர்பாடலுக்கு அவர் பெரிதும் பயன்பட்டார். மே 18-ம் தேதி காலை சுமார் 7.30 மணி இருக்கும்போது ராணுவத்தினர் வந்து, ‘நீங்கள் புலிகள் அமைப்பில் ஒரு நாள் உறுப்பினராக இருந்தால்கூட எங்களிடம் வந்து சரணடைந்துவிடுங்கள். உங்களுக்கு ஐ.நா. மூலம் பொது மன்னிப்பு வழங்கப்படும்’ என்று அறிவித்தார்கள். ஜோசப் அடிக ளாரும், ‘நாம் சரணடைவோம். ஐ.நா. நம்மை விடுவிக்கும்!’ என்றார். பேருந்துகளைக் கொண்டுவந்து நிறுத்தி, அதில் போராளிகளை ஏற்றினார்கள். எல்லோரையும் ஏற்றிவிட்டு அருட்தந்தையும் அந்தப் பேருந்தில் ஏறிக்கொண்டார்.

என் மகளின் உடல்நிலை மோசமாக இருந்ததால் நான் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டேன். அன்று சரணடைந்த எந்த ஒரு போராளியையும் அதன் பிறகு யாரும் எங்கும் உயிரோடு பார்க்கவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை.

யுத்தம் முடிவுக்கு வந்து, நான்கு வருடங்களாகிவிட்டன. போர் முடிந்த பிறகு, 17,500 விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்து இருப்பதாக முதலில் சொன்னது அரசு. பின்னர் 15,000 என்றது. இப்படிக் குறைந்து குறைந்து இறுதியில் 11,000 போராளிகளின் பெயர் விவரங்களை வெளியிட்டது அரசு.

சரணடைந்த புலிகள் கொல்லப்பட்டதற்கு இலங்கை புது விளக்கம்

விடுதலைப் புலிகளின்தலைவர்கள் சரணடைவதாக விடுத்த அறிவிப்பு களமுனைக்கு கிடைப்பதற்கு தாமதமாகிவிட்ட தாலேயே அவர்கள் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு விளக்க அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதாக தகவல் வெளி யாகி உள்ளது. தாருஸ்மான் அறிக்கை மற்றும் சேனல் 4 காணொளி ஆகியவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசு…

தயாரிக்கும் இரண்டு அறிக்கைகளில் ஒன்றிலேயே மேற்கூறிய விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக ரகசியத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் சரணடையும் விடயம் மே 17ம் தேதி நண்பகலே அன்றைய காலகட்டத்தில், அதிபர் ராஜபக்சவின் ஆலோசகராக இருந்த பசில் ராஜபக்சவுக்கு கிடைத்திருந்தது.

ஆயினும் களமுனையில் கடுமையான யுத்தம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தால், அத்தகவல் உரிய நேரத்தில் களமுனையின் கட்டளை அதிகாரிகளைச் சென்றடையவில்லை அதன் காரணமாகவே மோதலின் போது விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டனர்.

அத்துடன் வன்னி யுத்த காலகட்டத்தில் மருந்துப் பொருட்களையும், அத்தியாவசிய பொருட்களையும் விநியோகிக்கும் பொறுப்பு பசில் ராஜபக்சவிடமே இருந்தது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை மூலம் இதுவரை காலமும் யுத்தக்குற்றங்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவும், அதிபர் மஹிந்த ராஜபக்சவும் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலைமாறி, தற்போது அமைச்சர் பசில் ராஜபக்சவின் பெயரும் அதில் சேர்க்கப்படக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் தளபதிகளின் மனைவிமார் யார் யார் என்ற பட்டியல் தற்போது 
வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது சரணடைந்த புலிகளின் மூத்த தளபதிகளின் 
விபரங்களும் வெளியாகியுள்ளது. குறிப்பாக சரணடைந்தவர்கள் பொதுமகள் மற்றும் 
போராளிகள் முன் நிலையிலேயே சரணடைந்துள்ளார்கள். இதனால் பல சரணடைவுகளை நேரில்
பார்த்த சாட்சிகள் உண்டு. இலங்கை இராணுவத்தின் தடுப்பு முகாம்களுக்குச் 
சென்ற இச் சாட்சிகள் , பின்னர் விடுதலையாகி வெளியே வந்து தாம் நேரில் 
கண்டதை கூறியுள்ளார்கள். 

இதனை நேரில் பார்த்த 
சாட்சியங்களுக்கு அமைவாக இப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப் 
பட்டியலில் உள்ளவர்கள் குறித்து இலங்கை இராணுவம் இதுவரை எந்த ஒரு தகவலையும்
வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். கடந்த சில 
வாரங்களுக்கு முன்னர், இலங்கை இராணுவத்தின் அறிக்கை ஒன்றின் படி, தம்மிடம் 
இனி எவரும் இல்லை என்று, இரகசிய முகாம்கள் என்று ஒன்று இயங்கவில்லை என்றும்
அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.அப்படி என்றால் பட்டியலில் உள்ள சரணடைந்த அவ்வளவு பேருக்கும் என்ன நடந்தது என்ற கேள்விகள் எழுந்துள்ளது ….

மணலாறு கட்டளைப் பணியகத் தளபதிகளில் ஒருவரான செல்வராசா
மணலாறு கட்டளைப் பணியக தளபதிகளில் ஒருவரான பாஸ்கரன்
இம்ரான் பாண்டியன் சிறப்புத்தளபதி வேலவன்
தளபதி லோறன்ஸ்
தளபதி குமரன்
விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன்
மட்டுமாவட்ட தளபதிகளில் ஒருவரான பிரபா
தமிழீழ அரசியல் துறைதுணைப் பொறுப்பாளர் சோ.தங்கன்
வழங்கப்பகுதி பொறுப்பாளர் ரூபன்
நகைவாணிபங்களின் பொறுப்பாளர் பாபு
தமிழீழ வைப்பகப் பொறுப்பாளர் வீரத்தேவன்
தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் கி.பாப்பா
தமிழீழ விளையாட்டுத்துறை துணைப் பொறுப்பாளர் ராஜா(செம்பியன்) அவரது மூன்று பிள்ளைகள்.
தமிழீழ அரசியல் துறையைச்சேர்ந்த கானகன்
தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர். வெ.இளங்குமரன்,மனைவி வெற்றிச்செல்வி மற்றும் மகள்
தமிழீழ கல்விக்கழக பொறுப்பாளர்களில் ஒருவரான அருணா
விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் மற்றும் அவரது மகன், உதவியாளர் போராளி ஐங்கரன்
தமிழர் புனர்வாழ்வுக்கழக துணை நிறைவேற்றுப் பணிப்பாளர் சொ.நரேன்
தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர் பிரியன் மற்றும் குடும்பம்
தமிழீழ நிர்வாக சேவை முன்னாள் பொறுப்பாளர் வீ.பூவண்ணன்
தமிழீழ நிர்வாசேவை பொறுப்பாளர்களில் ஒருவர் தங்கையா
தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவரான மலரவன்
தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவரான பகீரதன்
தமிழீழ போக்குவரத்துக்கழக பொறுப்பாளர் குட்டி
தமிழீழ கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை
திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன்
யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி
அரசியல்துறை நிர்வாகப் பொறுப்பாளர் விஜிதரன்
தளபதிகளில் ஒருவரான வீமன்
வனவள பாதுகாப்புப்பிரிவு பொறுப்பாளர் சக்தி குடும்பம்
சிறுவர் இல்லங்களின் பொறுப்பாளர் இ.ரவி
முள்ளியவளைக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சஞ்சை
நீதி நிர்வாகப் பொறுப்பாளர் பரா
சமர்ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகி
ராதா வான்காப்புப் படையணி பொறுப்பாளர்களில் ஒருவர் குமாரவேல்
தமிழீழ மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் ரேகா
மணலாறு மாவட்ட கட்டளைத்தளபதி சித்திராங்கன்
மாலதி படையணித் தளபதிகளில் ஒருவரான சுகி
கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான அருணன்
மருத்துவப் பிரிவைச் சேர்ந்த மனோஜ்
நிதித்துறையைச் சேர்ந்த லோறன்ஸ்  வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை கொன்று விடுமாறு அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார் என்று அந் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் அவர் இவ்வாறு சாட்சியளித்துள்ளார்.வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொன்சேகா நீதிமன்ற விசாரணையின்போது கூறுகையில், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்து விடுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்ததாக இறுதிக் கட்ட யுத்தத்தில் ராணுவத்தினருடன் தங்கியிருந்த பத்திரிக்கையாளர்கள் இருவர் மூலமாக நான் கேள்விப்பட்டிருந்தேன்.

ஆனால் அதற்கு மேல் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. மேலும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் யாரும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்ததாக நான் அறியவுமில்லை.

மேலும் ராணுவத் தளபதி என்ற வகையில் அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள எனக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை.

இந்த விவரங்களை நான் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடும் போது தெரிவித்திருந்தேன்.

போர் காலத்தில் என்னால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ராணுவத் தளபதியே என்னை கைது செய்தார்.

முன்பு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போரில் பின்னடைவு ஏற்பட்டபோது,மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் இருந்த ஒரு அதிகாரி கோழைத்தனமாக கண்ணீர் விட்டு அழுதார். இதனால் படையின் கட்டளை பிறப்பிக்கும் பொறுப்பில் இருந்து அவரை நீக்கினேன். ஆனால், 2010 ஜனவரி மாதம் அந்த அதிகாரி மூலமாகவே என்னை கைது செய்ய வைத்தனர்.

நாட்டுக்காக நான் ஏராளமான தியாகங்களைச் செய்துள்ளேன். ஆனால், என்னை கோதபய நம்பவே இல்லை. என் மீது அவருக்கு எப்போதுமே சந்தேகம் இருந்து வந்தது.

மேலும் ராணுவ வீரர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை இலங்கை அரசு மதிப்பது தற்போது குறைந்துவிட்டது.

மேலும் போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களையும் போரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் மறுவாழ்வு அளிக்க நான் முன் வைத்த திட்டத்தையும் அதிபர் ராஜபக்சேவும் கோதபயவும் ஏற்க மறுத்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

மேலும் புலிகளுக்கு எதிராக தான் தலைமை தாங்கி நடத்திய தாக்குதல்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

66980,xcitefun-image002 images aa2638 a5f13555bd4ef4a5a40a8d461e62c6ca_XL


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் சிறிலங்க ராணுவத்திடம் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் தலைவர்க‌ள் பா. நடேச‌ன், பு‌லி‌த்தேவ‌ன் உ‌ள்‌ளி‌ட்டோரை சுட்டுக் கொல்லுமாறு பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்ச உத்தரவிட்டார் என்று சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

கொழும்புவில் இருந்து வெளிவரும் சண்டே லீடர் எனும் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியிலேயே, சிறிலங்க ராணுவத்தின் முன்னாள் தளபதியும், தற்போதைய அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான சரத் பொன்சேகா இவ்வாறு கூறியுள்ளார். 

போரின் இறுதி நாட்களில் புலிகளின் மூன்று முக்கிய தலைவர்கள் படையினரிடம் சரணடைவது பற்றிப் பேசப்பட்டது குறித்து நான் அறிந்திருக்கவில்லை. 

புலிகளின் தலைவர்கள், நோர்வே அரசு, பல்வேறு வெளிநாட்டுத் தரப்புகள், பசில் ராஜபக்ச போன்றோருக்கு இடையிலேயே இது பற்றிய கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

புலிகளின் சில தலைவர்கள் சரணடைய முன்வந்தது பற்றி பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

அப்போது – களத்தில் போரில் ஈடுபட்டிருந்த 58வது டிவிசனின் தளபதியான பிரிகேடியர் சவீந்திர சில்வாவுடன் உடனடியாக தொடர்பு கொண்டு – “புலிகளின் முக்கிய தலைவர்கள் எவரும் சரணடைவதற்கு இடமளிக்க வேண்டாம். அவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும்” என்று கோத்தாபய கட்டளை இட்டிருந்தார் என்று பின்னரே எனக்குத் தெரியவந்தது.

மே 17ம் தே‌தி முள்ளிவாய்க்காலுக்கு வடக்கே புலிகள் 100 சதுர ‌மீ‌ட்ட‌ர் பர‌ப்பள‌வு பகுதிக்குள் முற்றுகையிடப்பட்டிருந்த நிலையில் – விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறு‌ப்பாள‌ர் பா. நடேசன், சமாதான செயலக‌ப் ப‌ணி‌ப்பாள‌ர் புலித்தேவன் மற்றும் தளபதி ரமேஷ் ஆகியோர் படையினரிடம் சரணடைய முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில மணிநேரம் முன்னதாக – விடுதலைப் புலிகளின் தலைவர்கள் எப்படிச் சரணடைவது என்பது குறித்து – மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடான பல தகவல்கள் பரிமாறப்பட்டன. 

விடுதலைப் புலிகளின் இரு அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு அரசு ஒன்று, சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிறிலங்கா அரச அதிகாரிகள் ஆகியோருக்கு இடையில் இந்தப் பரிமாற்றஙகள் நிகழ்ந்தன. 

அப்போது – வெள்ளை‌‌க் கொடியை உயர்த்திக் காட்டிய படி படையினரிடம் செல்லும்படி அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இதன் படியே அந்த மூன்று தலைவர்களும் தமது குடும்பத்தினருடன் சரணடைய முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

மே 17ஆம் திகதி நள்ளிரவில் அல்லது அடுத்த நாள் விடிகாலையில் விடுதலைப் புலிகளின் மூன்று தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

முன்னதாக – கோத்தாபய ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் கலந்துரையாடிய பி்ன்னரே – வெள்ளை‌க் கொடியுட‌ன் படையினரிடம் போகுமாறு விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த அறிவுறுத்தல் அனைத்துலக அனுசரணையாளர்கள் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 

இந்தச் சம்பவம் பற்றி தற்போது மேஜர் ஜெனரல் நிலையிலுள்ள சவீந்திர சில்வாவுடன் சண்டே லீடர் தொடர்பு கொண்டு கேட்ட போது – இராணுவப் பேச்சாளரின் அனுமதியைப் பெறாமல் இதுபற்றி தான் எதுவும் கூற முடியாது என்று மறுத்துவிட்டார். 

பின்னர் – இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் இது பற்றிக் கேட்டபோது – தற்போதைய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் அனுமதி இன்றி தான் எதுவும் கூற முடியாது என்று மறுத்து விட்டார்.

பின்னர் – சண்டே லீடர் மீண்டும் தொடர்பு கொண்ட போது – மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும், தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவும் இதுபற்றி கருத்து வெளியிட மறுத்து விட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பதிலளித்துள்ளார் எ‌ன்று ச‌ண்டே ‌லீட‌ர் செ‌ய்‌தி வெ‌ளி‌யி‌ட்ட‌ள்ளது.

 

TPN NEWS


SHARE