421

நஸ்ரியாவுக்கு வலை வீசும் இயக்குனர் 

9/20/2014 12:16:43 PM

நஸ்ரியாவை மீண்டும் நடிக்க வைக்க இயக்குனர்கள் வலை வீசி வருகின்றனர்.‘நேரம்‘, ‘நய்யாண்டி’, ‘ராஜா ராணி’ படங்களில் நடித்த நஸ்ரியா நாசிம் சினிமாவில் நுழைந்த மிக குறுகிய காலத்திலேயே திருமணம் செய்துகொண்டார். மலையாள நடிகர் பஹத் பாசிலை அவர் மணந்தார். திருமணத்துக்கு பிறகு  படங்களில் நடிக்காமல் இல்லற வாழ்க்கையில் மூழ்கி இருக்கிறார். நிறைய படங்களில் நடிக்க அழைப்பு வந்தும் ஒப்புக்கொள்ளவில்லை. மார்க்கெட்டில் உள்ள ஹீரோயின் கைநழுவிபோய்விட்டாரே என்று பல இயக்குனர்கள் அவர் மீது குறிவைத்திருக்கின்றனர். எப்படியாவது அவரை மீண்டும் நடிக்க அழைத்துவரும் முயற்சியில் உள்ளனர்.

பஹத் பாசில் நடித்த ‘உஸ்தாத் ஓட்டல்’ என்ற படத்தை இயக்கியவர் அன்வர் ரஷீத். இருவரும் நெருங்கிய நண்பர்கள். அடுத்து பஹத்தை வைத்து புதிய படம் இயக்க உள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியாவை நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அவரைப்போலவே சில தமிழ் திரையுலக இயக்குனர்களும் ஸ்கிரிப்ட்டை கையில் வைத்துக்கொண்டு நஸ்ரியாவை நச்சரித்த வண்ணம் உள்ளனர். பஹத்துடன் ஏற்கனவே நஸ்ரியா ‘பெங்களூர் டேஸ்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் ஹிட்டானது. அதே ஜோடியை திருமணத்துக்கு பிறகு நடிக்க வைத்தால் நன்றாக கல்லா கட்டலாம் என்று இயக்குனர்கள் மனக்கணக்கு போட்டு வருகின்றனர்.

 

SHARE