13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. காவல்துறை அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய விடயங்களை அமுல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண முதலமைச்சரினால் மாகாண காவல்துறை ஆளுனரை நியமிக்க அனுமதியளிக்க வேண்டுமென தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருவதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.மோட்டார் போக்குவரத்து காவல்துறை உள்ளிட்ட ஏனைய நிர்வாக விடயங்களில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவில் 150 தடவைகள் அரசியல் சாசனம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நேரத்தில் 13ம் திருத்தச் சட்டம் சிறந்ததாக அமைந்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த நிறைவின் பின்னர் சில மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் அரசாங்கத்துடன் சிறந்த உறவுகளைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.