14 இஸ்ரேலிய பிணைக் கைதிகள், 42 பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பு!

77

 

காசா பகுதியில் பிடிபட்டுள்ள 14 பணயக் கைதிகளும், 42 பாலஸ்தீன கைதிகளும் இன்று இரண்டாம் நாளான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விடுவிக்கப்படுவார்கள் என இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பரிமாற்றங்களை கட்டாயப்படுத்தும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் ஆண் – பெண் என 42 கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 14 பணயக்கைதிகள் ஒப்படைக்கப்படுவார்கள் என்று இஸ்ரேலிய அதிகாரப்பூர்வ ஆதாரம் தெரிவித்துள்ளது.

நான்கு நாள் போர்நிறுத்தத்தின் முதல் நாளில், ஹமாஸ் அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட சுமார் 240 பணயக்கைதிகளில் 24 பேரை விடுவித்தது. அதே நாளில் 39 பாலஸ்தீனியர்களை சிறையிலிருந்து இஸ்ரேல் விடுவித்தது.

காசாவில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் 13 இஸ்ரேலியர்கள், 10 தாய்லாந்து நாட்டவர்கள் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர் அடங்குவர்கள்.

நான்கு நாட்களில், ஹமாஸ் குறைந்தது 50 இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இஸ்ரேல் 150 பாலஸ்தீனிய கைதிகளையும் விடுவிக்க உள்ளது.

விடுவிக்கப்படும் ஒவ்வொரு 10 பணயக்கைதிகளுக்கும் கூடுதல் நாள் போர்நிறுத்தம் நீட்டிக்கப்படலாம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ டைடன் அது நிறைவேறும் என்று நம்புவதாகக் கூறினார்.

SHARE