இடைக்கால வரவு செலவுத்திட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதியஅரசாங்கத்தின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால்கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி இடைக்கால வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
163 மேலதிக வாக்குகளினால் இந்த வரவு செலவுத் திட்டயோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 164பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
எதிராக ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்குமார மட்டும்
வாக்களித்திருந்தார். இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின்இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர்பாராளுமன்றில் நடைபெற்றது.
அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகஏற்கனவே எதிர்க்கட்சிகள் உறுதியளித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது. அதற்கு இணங்க இன்றைய தினம் வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு வாக்களிப்பில்எதிர்க்கட்சிகளும் ஆதரவாகவே வாக்களித்தன.