18 வயது யுவதி தூக்கிட்டு தற்கொலை- 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை.

601

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா தோட்டத்தில் 18 வயது யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த யுவதி நேற்று மாலை தனது வீட்டில் வைத்தே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யுவதி தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையிலும் கண்டறியபடவில்லையெனவும் சடலம், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனை விதிப்பு

களுத்துறை மாவட்டம் புளத்சிங்கள, மஹாகம என்ற பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 குற்றவாளிகளுக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் திகதி லால் குணவர்தன என்பவரை கொலை செய்ததாக குற்றவாளிகளுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனை விதிப்பதாக களுத்துறை நீதவான் பத்மன் சூரசேனா அறிவித்தார்.

புளத்சிங்கள பகுதியை சேர்ந்த 4 பேருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE