2007ம் ஆண்டு 10 வீதமான பணத்தையும், அதன் பின்னர் அண்மையில் 10 வீதமான பணத்தையும் மட்டுமே செலுத்தியுள்ளார்.
டி.ஆh. விஜேவர்தன மற்றும் சிற்றம்பலம் ஆகிய வீதிகளுக்கு இடையில் இந்தக் காணி அமைந்துள்ளது.
இந்தக் காணியின் விலை 2.4 பில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் 20 வீதமான பணத்தை மட்டுமே பெக்கர் செலுத்தியுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமால் பெரேரா தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தக் காணியில் ஒர் வாகனத் தரிப்பிடம் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த காணியை ரவி விஜேரட்ன என்ற வர்த்தகர் ஒதுக்கீடு செய்திருந்தார்.
ரவி விஜேரட்ன தற்போது பெக்கருடன் இணைந்து 400 அறைகளைக் கொண்ட சொகுசு ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹோட்டல் நிர்மாணம் குறித்த வரைவுத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், காணிக்கான முழுத் தொகையையும் செலுத்தியதன் பின்னரே நிர்மானப் பணிகளுக்கு அனுமதியளிக்கப்படும் எனவும் நிமால் பெரேரா தெரிவித்துள்ளார்.