இந்தியா – மாலைதீவு இணைச் செயலாளரான திருமதி சுஜித்ரா துரைசுவாமிநாதன் இலங்கை விஜயம்
யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை – இந்தியா – மாலைதீவு இணைச் செயலாளரான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன்,
இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட குரும்பசிட்டிப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 7 வீடுகளை பயனாளிகளிடம் கையளித்தார்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், ஒவ்வொரு வீடும் தலா 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்டதுடன், வீடு அமைப்பதற்கான கட்டிட வேலைகளை பயனாளிகளே மேற்கொண்டிருந்தனர்.