பிரதான எதிர்க்கட்சியாகக் கருதப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கூட்டரசமைக்க ஒத்துழைத்து அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றதையடுத்து, நாட்டின் பிரதான எதிர்க்கட்சி எது? அதன் தலைவர் யார்? என்ற சர்ச்சை விஸ்பரூபமெடுத்துள்ளது.

379

 

 

பிரதான எதிர்க்கட்சியாகக் கருதப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கூட்டரசமைக்க ஒத்துழைத்து அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றதையடுத்து, நாட்டின் பிரதான எதிர்க்கட்சி எது? அதன் தலைவர் யார்? என்ற சர்ச்சை விஸ்பரூபமெடுத்துள்ளது. அத்துடன், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சு.கவின் உப தலைவரான நிமல் சிறிபால டி சில்வாவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக்குவதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன.

Anura Priyadarshana Yapa  543624

சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவும் இது விடயம் பற்றி கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்திவருகிறார். இது தொடர்பில் தனது தீர்ப்பை எதிர்வரும் 7 ஆம் திகதி அவர் அறிவிக்கவுள்ளார். இந்நிலையில், கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டது. குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் வராது என்றே நாம் நம்புகிறோம். புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே அமைச்சுப் பதவிகள் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியின் பொறுப்பையும் நாம் சரிவர நிறைவேற்றிவருகிறோம். தேவையான நேரங்களில் பிழைகளைச் சுட்டிக்காட்டி, விமர்சனங்களை முன்வைக்கவும் நாம் தயங்குவதில்லை.

எது எப்படியிருந்தபோதிலும் எதிர்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பில் சபாநாயகர் எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். அவரின் முடிவே இறுதியானது. இதனை நாமும் ஏற்போம்” – என்று சு.கவின் பொதுச் செயலாளர் அநுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அதேவேளை, இதன்போது கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான சுசில் பிரேமஜயந்த – நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நான்கு கட்சிகளே இருக்கின்றன. சு.கவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலேயே இருக்கிறது.

தினேஷ் குணவர்தன போன்றோரும் மேற்படி கூட்டணியிலேயே நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். நிலைமை அப்படியிருக்கையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலேயே சிலர் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அப்படியாயின், நிமலுக்குப் பதிலாக இன்னொருவரை நியமித்தால் அவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்தானே. இதை நாம் குழப்பிகொள்ளத் தேவையில்லை. தற்போது தேசிய அரசு அமையவில்லை. நாம் ஒத்துழைப்பு மாத்திரமே அரசுக்கு வழங்கியுள்ளோம். எதிர்க்கட்சி பொறுப்பிலிருந்து நாம் விலகிச் செல்லவில்லை

SHARE