27 பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது- விசாரணையில் ‘திடுக்’ தகவல்கள் Posted by: Veera Kumar Published: Monday, June 16, 2014, 14:20 [IST] Ads by Google திண்டுக்கல்: காதலிப்பதாக ஏமாற்றி 27க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த நவீன காதல் மன்னன் பொன்சிபி என்ற வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாசிலாமணிபுரம் ஸ்ரீநகரை சேர்ந்தவர் பொன் சிபி (21). இவர் மீது மதுரை ஆனையூர் முடக்கத்தான்சாலையை சேர்ந்த சந்திரமோகன் மகள் ரெஜினா (24) திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித் தார். அதில் ” நான் பி.காம்.பட்ட தாரி. திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் வசிக்கும் எனது அக்கா வீட்டிற்கு அடிக்கடி வருவேன்
அவ்வாறு வந்தபோது பொன்சிபி ஒருமுறை என்னை பின்தொடர்ந்தார். நான் அவரை கண்டு கொள்ளவில்லை. இருந்தபோதும் தொடர்ந்து என்னை பின் தொடர்ந்து வந்து காதலிப் பதாக தெரிவித்தார்.