68

 

தளபதி விஜய்யின் கில்லி திரைப்படம் உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை உலகளவில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இப்படம் ரீ-ரிலீஸிலும் சாதனை படைத்ததை தொடர்ந்து, கில்லி படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் இயக்குனர் தாரணி உள்ளிட்டோர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து கௌரவித்தனர். அந்த புகைப்படங்கள் கூட வெளிவந்து வைரலானது.

விஜய்க்கு நாடுமுழுவதும் இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கிறதா என கில்லி ரீ-ரிலீஸ் அனைவரையும் அசரவைத்துள்ளது. குறிப்பாக பிரான்ஸ், மலேசியா, இலங்கை போன்ற இடங்களில் விஜய்யை கொண்டாடி வருகிறார்கள்.

தியேட்டரில் நடந்த சம்பவம்
இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் திரையிடப்பட்ட கில்லி படத்தை விஜய் ரசிகர்கள் ஆட்டம் பட்டத்துடன் கொண்டாடி வந்துள்ளனர். திரையரங்கில் இந்த கொண்டாட்டம் எல்லை மீறியதன் காரணமாக உள்ளே வந்த போலீஸ், ரசிகர்கள் சிலரை குண்டுக்கட்டாக தூக்கி சென்றுள்ளனர்.

இதனால் திரையிடப்பட்டு வந்த படமும் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

SHARE