தமிழீழ விடுதலைப் புலிகளின் பொட்டம்மானின் நெருங்கிய முக்கியஸ்தர்கள் மூவர் மலேசியாவில் கைது

548

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்றிரவு (26) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாக மிகவும் நம்பரமான தகவல்கள்  தெரிவிக்கின்றன.

முன்னதாக மூவரே கைதுசெய்யப்பட்டிருந்ததாக மலேசிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்திருந்தன. எனினும், மொத்தமாக 9 பேர் கைதுசெய்யப்பட்டிருந்ததாகவும், இவர்கள் அனைவரும் தற்போது இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் மலேசிய மனித உரிமை அமைப்பொன்றின் பேச்சாளர் ஒருவர்  தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மலேசிய அதிகாரிகள், மூவரின் பெயர் விபரங்களை மட்டுமே வெளியிட்டிருந்ததாகவும், ஏனைவர்கள் 6 பேர் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மலேசிய அதிகாரிகளினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும், ஆரம்பத்தில் இலங்கை அதிகாரிகளே, மலேசிய பொலிஸ் நிலையத்தில் இவர்களிடம் விசாரணைகளை நடத்தியதாக கைதுசெய்யப்பட்டவர்களைச் சந்தித்த சட்டத்தரணியொருவர்  தெரிவித்துள்ளார்.

பெயர், விபரங்கள், புகைப்படங்கள் வெளியிடப்பட்ட மூவரில் ஒருவர் ஐ.நா. அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்பட்டவர் எனவும், மற்றையவர் அகதி அந்தஸ்திற்கு விண்ணப்பித்திருந்தவர் எனவும், மூன்றாவது நபர் மலேசியாவில் உரிய வீசா அனுமதியுடன் இருந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மலேசியாவில் இந்த விசேட தேடுதல் தொடரும் என மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  எவ்வாறாயினும், மலேசியாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அலுவலகத்தில் பதிவுசெய்துகொண்டு, அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்பட்ட சுமார் 4,500 பேர் மலேசியாவில் தங்கியுள்ளனர்.

இதேவேளை, மலேசியாவில் மேலும் பல இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இந்த விவகாரம் தற்போது பெரும் அழுத்தத்தைத் தமக்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் மலேசியாவிலுள்ள உள்ளுர் மனித உரிமை அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்டவர்கள் ஐ.நா. அகதிகள் அந்தஸ்து அட்டையை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக மலேசிய அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து முழுமையாக ஆராயப்படும் என மலேசியாவிற்கான ஐ.நா. அகதிகள் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நிலைமை இவ்வாறிருக்க, அகதிகள் அந்தஸ்து அட்டை வழங்கப்பட்டவர்கள் குறித்து மீண்டும் விசாரணைகளை நடத்துவதற்கும் வழங்கப்பட்ட அந்தஸ்தை மீள்பரிசீலனை செய்வதற்கும் மலேசியாவிலுள்ள ஐ.நா. அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் தயாராகி வருவதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்களும் வெளியாகியுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் மூவர் மலேசியாவில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்பாக நாடு கடத்தப்பட்டு உள்ளனர்

. வான் படை, புலனாய்வு பிரிவு, பிரசார பிரிவு ஆகியவற்றை சேர்ந்த ஒவ்வொருவரே மலேசியாவின் பயங்கரவாத ஒழிப்பு விசேட பொலிஸாரின் தேடுதல் வேட்டையில் கடந்த 15 ஆம் திகதி சிலாங்கூர் பிரதேசத்தில் வெவ்வேறு இடங்களில் வைத்து பிடிக்கப்பட்டனர்.

புலிகளின் வான் படை ஸ்தாபகர் கேணல் சங்கர். சங்கரின் மகள் மலேசியாவில் படிக்கின்றார். சங்கரின் மகளுடைய கணவனே குசந்தன். ஆயினும் இத்தம்பதி நான்கு வருடத்துக்கும் மேலாக பிரிந்து வாழ்கின்றனர்.

குசந்தன் துறை சார்ந்த நிபுணத்துவம் பெற்ற விமானி. வெளிநாட்டில் இப்படிப்பை படித்தவர். புலிகளின் வான் படையை கட்டியெழுப்புகின்ற செயற்பாட்டில் ஈடுபட்ட இளைய தலைமுறையை சேர்ந்த ஒருவர். வன்னியில் புலிகளின் விமானங்கள் பறந்து திரிந்தபோது பங்களிப்புகள், வழிகாட்டல்கள் ஆகியவற்றை வழங்கி இருக்கின்றார். மலேசியா சென்ற பிற்பாடு இவர் மெதுமைப் போக்குடன் நடந்து இருக்கின்றார்.

ஏனைய இருவரில் ஒருவர் பொட்டம்மானின் நெருங்கிய சகா ஆவார். மற்றவர் நிதர்சனத்தில் சவுண்ட் இன்ஜினியராக வேலை பார்த்தவர். புலிகளின் சர்வதேச வலையமைப்பை சேர்ந்த இன்னும் ஏராளமானோர் இவர்களின் கைதை தொடர்ந்து பிடிக்கப்படலாம் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

as_1as_2as_3

THINAPPUYAL NEWS

SHARE