5 நாட்களுக்கு சார்ஜ் தாங்கும்! கீழே விழுந்தாலும் உடையாது! வந்தாச்சு ”பேட்மேன் Smartphone”

59

 

DOOGEE S89 Pro பேட்மேன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் அதன் அசத்தலான அம்சங்கள் குறித்து தெரியவந்துள்ளது.

12000mAh வலுவான பேட்டரியைக் இந்த போன் கொண்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம். அதாவது, ஒரு முறை சார்ஜ் செய்தால், 5 நாட்களுக்கு சார்ஜ் தாங்கும். போன் தண்ணீரில் விழுந்தாலும் இயங்கும், கீழே விழுந்தாலும் உடையாது.

இப்படி சூப்பர் அம்சங்களுடன் இந்த போன் வாடிக்கையாளர்களை கவர்கிறது. DOOGEE S89 Pro போனானது Mediatek Helio P90 சிப் மூலம் இயக்கப்படுகிறது. ஜூலை 29 வரையில் இதன் விலை $239.99 ஆக இருக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் அதன்பின்னர் விலையானது $700 வரை இருக்கும் என தெரியவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பேட்மேன்-தீம் டிஸ்ப்ளே பேட்மேன் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். இதன் கடினத்தன்மை MIL-STD-810H சான்றளிக்கப்பட்டது மற்றும் இது ஆண்ட்ராய்டு 12 இல் இயங்கும்.

64MP பிரதான கேமரா, 20MP நைட் ஷூட்டர், 8MP மேக்ரோ/வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 16MP செல்ஃபி ஷூட்டர் ஆகியவை கொண்ட கேமரா அமைப்பு கொண்டது ஸ்மார்ட்டான இந்த ஸ்மார்ட்போன்.

4G இணைப்பு மற்றும் NFC ஐ ஆதரிக்கிறது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை பாதுகாப்பு அம்சத்தையும் கொண்டுள்ளது.

SHARE