55வயதான மைக்கல் ஜோன்ஸ் எனும் பிரித்தானியா வேல்ஸ் ஐச் சேர்ந்தவர் கம்போடியாவில் வயது குறைந்த சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாக கூறப்பட்டு கைது செய்ப்பட்டுள்ளார்

401

55 வயதான மைக்கல் ஜோன்ஸ் எனும் பிரித்தானியா வேல்ஸ் ஐச் சேர்ந்தவர் கம்போடியாவில் வயது குறைந்த சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாக கூறப்பட்டு கைது செய்ப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை கம்போடியாவிலேயே இடம்பெற்றுள்ளது. இது பற்றிய குற்றசாட்டில் மைக்கல்; கம்போடியாவில் சிறுமிகளுடன் இருந்ததாகவும் மேலும் 11 வயது சிறுமி ஒருவரினை கைகளில் பிடித்துக்கொண்டு தெருக்களில் நடமாடுவதும் கண்காணிக்கபட்டுள்ளது.

விசாரணைகளில் மைக்கல் குறித்த 11 வயது சிறுமியுடன் பல தடவைகள் விடுதியில் அறை எடுத்து தங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜெனிவாவில் பிறந்து வேல்ஸ்சில் வசிப்பவர் என்று கருதப்படும் மைக்கல் குறித்த 11 வயது சிறுமியுடன் மட்டும் பல தடவைகள் கம்போடியாவின் தலைநகரில் உள்ள பல விடுதிகளில் அறை எடுத்து தங்கியுள்ளார். மேலும் பல தடவைகளில் பொது இடங்களிலும் இவர் அச்சிறுமியை முத்தமிடுவது மற்றும் அணைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் கண்காணிக்கப்பட்டுள்ளது. மைக்கல் பிறிதொரு சந்தர்ப்பத்தில் குறைவான ஆடைகள் அணிந்த சிறுமிகளுடன் பொது இடத்தில் மைக்கலை சுற்றி இருப்பதும் அதில ஒரு குழந்தை அவரது மடியில் இருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மைக்கல் கம்போடியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். படங்கள் அனைத்தையம் அவதானித்ததில் மைக்கல் பாலியல் ரீதியாக சிறுமிகளை துஷ்பிரயோகம் செயததாகவே உணரப்பட்டுள்ளது. இது தொடர்பில் 11 வயது சிறுமியை விசாரணைக்கு உட்படுத்தியதில் வாடகைக்கு எடுக்கப்பட்ட அறையொன்றில் 3 தடவைகள் பாலியல் ரீதியாக உறவு கொண்டதன் பின்னர் 3 பவுண்ஸ் பணம் கொடுத்ததாக காவல்துறையினரிடம் அச்சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

முன்னதாக மைக்கல் பலதடவைகள் கம்போடியாவுக்கு வந்து சென்றிருப்பதாகவும் ஒவ்வொரு தடவையும் இவ்வாறு பாலியல் ரீதியாக சிறுமிகளை பாவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 12 மற்றும் 13 வயது மதிக்கத்தக்க சிறுமிகளை அழைத்து சென்று பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளதாகவும் விளையாடுவதற்கு பணம் கொடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் அச்சிறுமிகளை சந்தோசப்படுத்தியதன் பின்னர் வீட்டில் கொண்டு வந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் மைக்கல் தான் தங்கியிரும்பது ஒரு விடுதியிலும் ஆனால் குறித்த 11 வயது சிறுமியுடன் தங்குவதற்கு வேறு ஒரு விடுதியில் அறை எடுத்து பல தடவைகள் தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

விடுதிக்கு செல்லமுன்னர் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி கொடுத்ததாகவும் அப்படியே திரைப்படம் பார்ப்பதற்கு அழைத்து சென்றதாகவும், திரைப்படத்தின்போது அச்சிறுமியை முத்தமிடுவதும் அணைப்பதுமான செய்கையில் ஈடுபட்டுள்ளார். மேலும் குறித்த சிறுமியின் குடும்பத்தினருக்கு அவர்களின் வீட்டு வாடகை பணத்தினையும் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். மொத்ததில் 6 சிறுமிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் தாங்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகப்படுத்தப்பட்டதனை தெரிவித்துள்ளனர்.

குறித்த 4 சிறுமிகளில் ஒருவர் மறுவாழ்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மீதி 3வரும் அவர்களின் குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் கடந்த 27 ஆம் திகதி மைக்கல் கம்போடியாவில் வைத்து கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

SHARE