சிறீலங்காவில் இடம்­பெற்ற இனப்­ப­டு­கொலை தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று நடத்­த­ப­ட­வேண்டும். – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

734

சிறீலங்காவில் இடம்­பெற்ற இனப்­ப­டு­கொலை தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று நடத்­த­ப­ட­வேண்டும். தற்­போது தமிழி­னத்தின் இருப்பை முழு­மை­யாக மாற்­றி­ய­மைப்­ப­தற்­காக கட்­ட­மைக்­கப்­பட்ட இன­வ­ழிப்­பொன்று இடம்­பெற்­று­வ­ரு­கின்­றது.

இவற்றைத் தடை­செய்­வ­தற்கு இடை­கால நிர்­வாகம் ஒன்று ஏற்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும் தமி­ழர்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர தீர்­வாக சுய­நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தீர்­வொன்று வழங்­கப்­ட­வேண்டும் அத்­துடன் சிறீலங்காவில் இடம்­பெற்ற இன­வ­ழிப்பு தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று நடத்­தப்­ப­டுத்­து­வ­தற்கு இதுவே பொருத்­த­மான தரு­மாகும்.

இதற்­கான சந்­தர்ப்­பத்தை நழு­வ­விடும் பட்­சத்தில் தமி­ழர்­களின் அடை­யா­ளங்கள் அழிக்­கப்­பட்­டு­விடும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் ஜெனி­வாவில் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

ஜெனிவா ஊடக நிலை­யத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

சிறீலங்காவில் இடம்­பெற்ற இறு­திக்­கட்ட யுத்­தத்தின் போது பாரி­ய­ளவில் மனித உரிமை மீறல்­களும் யுத்­தக்­குற்­றங்­களும் இடம்­பெற்­ற­தற்­கான நேர­டிச்­சாட்­சி­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. அத­ன­டிப்­ப­டையில் வைத்துப் பார்க்­கையில் இறு­தி­யுத்­தத்தின் போதும் அதற்கு முன்­னரும் பின்­ரு­மான தரு­ணங்­களில் தமிழ் மக்கள் மீது நிகழ்ச்­சி­நி­ர­லி­டப்­பட்ட ஒரு இனப்­ப­டு­கொலை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது தெளி­வா­கின்­றது.

ஆகவே தான் நாம் இனப்­ப­டு­கொலை என்ற வார்த்தைப் பிர­யோ­கத்தை பயன்­ப­டுத்­து­கின்றோம். மேலும் இறுத்­தி­யுத்­திற்கு முகங்­கொ­டுத்த எத்­த­னையோ நேரடிச் சாட்சியங்கள் அவ்­வி­ட­யங்கள் தொடர்பில் மௌன­மாக வேண்­டி­ய­தொரு நிலைமை காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக எம் போன்ற மக்­க­ளுடன் நெருக்­க­மா­ன­வர்­க­ளுக்கு கூட அவர்கள் அச்­சத்­து­ட­னேயே தமது நெருக்­க­டி­யான நிலை­மை­களைத் தெரி­விக்­கின்­றனர்.

யுத்தம் நிறை­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாக அர­சாங்கம் அறி­வித்து ஐந்து வரு­டங்­க­ளா­கின்ற நிலை­யிலும் அர­சாங்கம் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு அல்­லது குறைந்த பட்சம் தமி­ழர்கள் சுதந்­தி­ர­மாக வாழ்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­க­ளையோ மேற்­கொள்­ள­வில்லை.

மாறாக தமிழ் மக்­களை அடக்­கு­மு­றைக்குள் ஆட்சி செய்­வ­தற்­காக திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்கள், நில ஆக்­கி­ர­மிப்பு, பௌத்த மதத்தை பரப்பும் செயற்­கா­டுகள் இவற்­றுக்­கெல்லாம் மேலாக இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பு ஆகிய செயற்­பா­டு­களை நன்கு திட்­ட­மிட்டு தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றனர்.

குறிப்­பாக இங்கு வரு­கை­தந்து தமி­ழர்­களின் நிலை­தொ­டர்பில் கருத்து வெளி­யிடும் அனைத்து தரப்­பி­னரும் நில ஆக்­கி­ர­மிப்பு தொடர்­பான கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருக்­கின்­றனர். ஆகவே இவ்­வா­றான கட்­ட­மைக்­கப்­பட்­தொரு இன­வ­ழிப்பை உட­ன­டி­யாகத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு இடைக்­கால நிர்­வாகம் ஒன்று அமைக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

தற்­போது நடை­பெற்று வரும் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் அமெ­ரிக்­கா­வினால் பிரே­ர­ணை­யொன்று சமர்ப்­பிக்­கப்­பட்டு சில திருத்­தங்­களும் மேற்­கொள்­ளப்­பட்­டிருக்­கின்­றன. இருப்­பினும் இப்­பி­ரே­ரணை தமி­ழர்­க­ளுக்கு ஏமாற்­ற­ம­ளிக்கும் ஒன்­றா­கவே காணப்­ப­டு­கின்­றமை துர்ப்­பாக்­கி­ய­மா­ன­தொன்­றாகும்.

இப்­பி­ரே­ர­ணையை கூர்­மை­யாக பார்க்­கையில் குறிப்­பாக எந்­வொரு இடத்­திலும் “சர்­வ­தேச விசா­ரணை” என்ற சொற்­பி­ர­யோகம் காணப்­ப­ட­வில்லை. தற்­போது திருத்­தப்­பட்­டுள்ள சரத்தின் பிர­காரம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யா­ள­ருக்கு இலங்­கையின் விட­யங்­களை ஆராய்ந்து அடுத்த கூட்­டத்­தொ­டரில் வாய்­மொ­ழி­மூ­ல­மான கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்த முடியும் என்­ப­தோடு அதற்கு அடுத்து நடை­பெ­ற­வுள்ள கூட்­டத்­தொ­ட­ரி­லேயே அறிக்­கை­யி­டலை முன்­வைக்க முடியும் எனக் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

60வருட கால­மாக தமிர்கள் தமது உரி­மைகள்மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக போரடி வரு­கின்­றனர். வெ;வாறான நிலையில் அப்­போ­ராட்­டத்­திற்­கென பாரிய வர­லா­றுகள் காணப்­ப­டு­கின்­றன. உயிர்கள் உட­மைகள் உட்­பட பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இழப்­பீ­டுகள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. ஆகவே இவை தொடர்பில் ஒரு விடயம் கூட உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என்­பது மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

60வருட கால தமிழர் போரட்­டத்தின் பரி­நாமம் மாற்­றப்­பட்டு பெரும்­பான்மை மதத்­தி­னரால் சிறு­பான்மை மதங்­க­ளான இஸ்லாம், கிறிஸ்­தவம், மற்றும் இந்து மதங்கள் தாக்­கப்­ப­டு­வ­தாக மட்டும் சித்­த­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கையில் சிறு­பான்மை மதங்கள் தாக்­கப்­ப­டு­வ­தென்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யது. இருப்­பினும் உரி­மை­க­ளுக்­கான போராட்­டங்கள் தொடர்பில் கவனம் செலுத்­தப்­ப­டு­வதே மிக முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கின்­றது.

இலங்­கையில் காணப்­பட்ட இனங்­க­ளுக்­கி­டை­யி­லான பிரச்­சி­னை­களின் வர­லாற்­றினை அறி­யா­த­வொரு நபர் இப்­பி­ரே­ர­ணையை தற்­போது வாசிக்கும் நிலை­மை­யேற்­பட்டால் அவரால் தமி­ழர்­களின் உரி­மைப்­போ­ராட்டம் தொடர்பில் அறிந்து கொள்­வ­தற்­கான எந்­த­வி­த­மான வார்த்­தைப்­பி­ர­யோ­கங்­களும் இடம்­பெற்­றி­ருக்­க­தி­ருக்­கின்­றது. இந்தப் பிரே­ர­ணையில் எங்­குமே “தமிழ்” என்­றொரு சொற்­ப­தமே காணப்­ப­ட­வில்லை என்­பது வருத்­த­ம­ளிக்­கின்­றது.

எம்மைப் பொறுத்­த­வ­ரையில் தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­களை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. அவர்கள் தொடர்பில் எமக்கு கடு­மை­யான விமர்­சனம் இருக்­கின்­றது. அதற்­காக ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டு­விட்டால் தமி­ழர்­களின் பிரச்­சினை தீர்ந்­து­விடும் என்று கூறி­வி­ட­மு­டி­யாது. ஆனால் இப்­பி­ரே­ர­ணையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதன் பிர­காரம் ஆட்சி மாற்றம் ஏற்­படும் பட்­சத்தில் இனங்­க­ளுக்­கி­டை­ய­லான பிரச்­சி­னைகள் தீர்ந்து விடும் என்ற தொனியை வெளிப்­ப­டுத்­து­கின்­றதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வி­ருக்­கின்­றது. ஆகவே நாம் இப்பிரேரணைய ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.

எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாம் கடந்த 60ஆண்டுகளுக்கு மேலாக பேராடிக்கொண்டிருக்கின்றோம். எமது உரிமைகளை பெற்று தலைநிமிர்ந்து சுதந்திரமாக வாழ்வதற்கும் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு ரீதியான இனவழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இடைக்கால நிர்வாகமொன்று அமைக்கப்படவேண்டும்.

இனப்பிரச்சினைக்கான நிரந்த தீர்வாக சுயநிர்ணய உரிமைளை அங்கீகரித்த தீர்தெவான்று வழங்கப்படவேண்டும். இதனை சர்வதேச சமூகத்தினரும் குறிப்பாக பிரேரணையை முன்வைத்திருக்கும் அமெரிக்க தரப்பினர் கருத்திற்கொண்டு தற்போது ஐக்கிய நாடுகளில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பிரேரணையில் இவ்விடயங்களையும் உள்வாங்குவதற்கு ஆவண செய்யவேண்டும் என்பது எமது வேண்டுகோளாகவிருக்கின்றது.

 

 

– See more at: http://www.tamilkathir.com/news/14559/58//d,full_article.aspx#sthash.bRNISuVh.dpuf

SHARE