394

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளிற்கு உதவுமாறு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டிபெனே துஜாரிக் இதனை தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆணையகத்தினால் உருவாக்கப்பட்ட மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துடன் ஒத்துழைக்குமாறு செயலாளர் நாயகம் இலங்கைiயை கேட்டுக்கொள்கிறார்.

இலங்கை அரசாங்கமும் அதன் மக்களும் ஐக்கிய நாடுகளின் முழுமையான கட்டமைப்புடன் ஆக்கபூர்வமாக இணைந்து செயற்பட வேண்டுமென அவர் கேட்டுக்கொள்கிறார். இது நாட்டினது தொடர்ச்சியான அபிவிருத்தி, நிரந்தர சமாதானம்,மற்றும் மனித உரிமை பாதுகாப்பிற்குதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதனை உறுதி செய்யவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை எடுத்து வரும் முனைப்புக்கள் பாராட்டுக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE