392

பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி எதற்காக இலங்கை சென்றார். எந்த அதிகாரித்தின் பேரில், அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார் என விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி, பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது.   அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:    பாஜக அரசு இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கும் என கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.    ஆனால், பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி எதற்காக இலங்கை சென்றார். எந்த அதிகாரித்தின் பேரில், அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என கூறினார்.

SHARE