இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று சனிக்கிழமை அந்தக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாளில் தெரிவுசெய்யப்பட்டனர். இதன்படி தமிழரசுக் கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, செயலாளராக கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த துரைராஜசிங்கம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
அந்தக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவராக பொன். செல்வராஜா, பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். உப தலைவர்களாக திருகோணமலையைச் சேர்ந்த துரைரட்ணசிங்கம், அம்பாறையைச் சேர்ந்த தோமஸ் வில்லியம், வவுனியாவைச் சேர்ந்த ப.சத்தியலிங்கம், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான எஸ்.பரஞ்சோதி, ஏ.எம்.இமாம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களாக எம்.ஏ.சுமந்திரன், சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். நிர்வாகச் செயலாளராக சி.குலநாயகம் தெரிவு செய்யப்பட்டார். பொருளாளர்களாக கனகசபாபதி, அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். அத்துடன் பின்வருவோர் துணைச் செயலாளர்களாகத் தெரிவாகினர். ஊடகத்துறை – பா.அரியநேத்திரன், சட்டத்துறை – கே.வி. தவராசா, மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரம் – ஈ.சரவணபவன், இளைஞர் விவகாரம் – சி.சிவகரன், கல்வி மேம்பாடு – சி.தண்டாயுதபாணி, மகளிர் விவகாரம் – அனந்தி சசிதரன், பேராசிரியர் நாச்சியார், மத,பண்பாட்டு விவகாரம் – சீ.யோகேஸ்வரன், விவசாயம் – கமலேஸ்வரன், மீன்பிடித்துறை – ஆனோல்ட், சமூகமேம்பாடு – எஸ்.சிவயோகன், கலையரசன் கொள்கைப் பரப்புகை – எஸ்.வேளமாலிகிதன் -ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.