Android KitKat இயங்குதளம் பயன்படுத்தப்படும் சாதனங்களின் எண்ணிக்கை உயர்வு

705

 

சில மாதங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் தனது Android இயங்குதளத்தின் பதிப்புக்கள் பயன்படுத்தப்படும் சாதனங்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது.இதில் இறுதியாக வெளியிடப்பட்டிருந்த Android KitKat இயங்குதளம் மிகவும் குறைந்தளவு சாதனங்களிலேயே பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும் தற்போது மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் கடந்த மாதம் 5.3 சதவீதமாகக் காணப்பட்டதுடன் இம்மாதம் உயர்வடைந்து 8.5 சதவீதத்தினை எட்டியுள்ளது.

இவற்றில் Android Jelly Bean பதிப்பே தொடர்ந்தும் முன்னிலையில் காணப்படுவதுடன், 60.8 சதவீதமான மொபைல் சாதனங்களில் இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

SHARE