Nothing Phone 2 நிரந்தர விலை குறைப்பு; ரூ.39,999க்கு பேஸ் வேரியண்ட் அறிவிப்பு

132

 

இந்திய சந்தையில் Nothing Phone 2 விலை கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பிரபல பிராண்டின் இரண்டாவது ஸ்மார்ட்போனான Nothing Phone 2வின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டில், நத்திங் போன் 2 ஜூலை மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இப்போது ​​ஆறு மாதங்களுக்குப் பிறகு பாரிய விலைக் குறைப்பை அறிவித்துள்ளது.

இந்த கைப்பேசியானது இப்போது Flipkart-ல் இருந்து 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் பேஸ் வேரியண்டின் விலை ரூ.39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நத்திங் ஃபோன் 2 Snapdragon 8 Gen 1 SoC-ல் இயங்குகிறது. தனித்துவமான Glyph interface உள்ளது. இது 50MP பிரைமரி சென்சார், இரட்டை பின்புற கமெரா அமைப்பு மற்றும் 4,700mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் Nothing Phone 2வின் விலை என்ன?
Nothing Phone 2 இந்திய சந்தையில் விலை ரூ. 5000 குறைந்துள்ளது. ரூ. 44,999க்கு வெளியான 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் தற்போது ரூ. 39,999க்கு விற்கப்படுகிறது.

அதேபோல், 12GB + 256GB வேரியண்ட் ரூ. 49,999ல் இருந்து இப்போது ரூ.44,999க்கு விற்கப்படுகிறது.

மேலும், 12GB + 512GB ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் மாடலின் விலை ரூ.54,999லிருந்து ரூ.49,999-ஆக குறைக்கப்பட்டது.

Nothing Phone 2 விவரக்குறிப்புகள்:
நத்திங் ஃபோன் 2 மாடல் டூயல் சிம் (நானோ) ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.0 இல் இயங்குகிறது. இது 6.7-இன்ச் முழு-HD (1,080×2,412 பிக்சல்கள்) LTPO OLED டிஸ்ப்ளே 1Hz முதல் 120Hz வரையிலான adaptive refresh rateஉடன் உள்ளது. இது Qualcomm 4nm Snapdragon 8+ Gen 1 SoC உடன் Adreno 730 GPU உடன் இணைந்து 12GB வரை ரேம் மூலம் இயக்கப்படுகிறது.

கமெரா:
நத்திங் ஃபோன் 2 மாடலில் 50எம்பி பிரைமரி கேமராவுடன் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

இது 1/1.56-இன்ச் சோனி IMX890 சென்சார் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 50எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவும் உள்ளது. செல்ஃபி என்று வரும்போது 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

Nothing Phone 2-ல் தனித்துவமான Glyph Interface உள்ளது. இது வெளிப்படையான பின் பேனலின் கீழ் LED லைட்டுகளைக் கொண்டுள்ளது. மேலும், இது 512ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது. மேலும் 45W வயர்டு சார்ஜிங், 5W Qi வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,700mAh பேட்டரியை கொண்டுள்ளது.

SHARE