வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழக்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பினை விலக்குவதாக யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் இன்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

478

policeeeவடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழக்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பினை விலக்குவதாக யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் இன்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்களான திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) பாலச்சந்திரன் கஜதீபன்இசந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோருக்கே இன்று நண்பகல் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தனிப்பட்ட பொலிஸார் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் மேலதிகமாக பாதுகாப்பு தேவையெனக்கருதினால் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறும் அக்கடிதத்தில் றொஹான் டயஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 13 ஆம் திகதியே மாகாணசபை உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்றுடன் அந்தப்பாதுகாப்பும் விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல்கள், தாக்குதல் சம்பவங்களையடுத்தே மாகாணசபை உறுப்பினர்கள் தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பினைக்கோரியிருந்தனர் இன்றுடன் பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ananthi
மேலும் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலகத்தில் கடந்த மே மாதம் 16 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தவிடாது தடுத்த பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்து அவைத்தலைவர் சீ.வீகே.சிவஞானத்திடம் 16 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கடிதம் ஒன்று சமர்ப்பித்துள்ளநிலையில் இவ்வாறு பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது….
SHARE