அசாத் சாலி வீட்டில் பெண்ணாம் – முற்றுகையிட்ட பொலிஸார்

286

பெண்ணொருவரை பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவரது உறவினர்களால் அசாத்சாலியின் வீடு நேற்று நள்ளிரவு வரை முற்றுகையிடப்பட்டிருந்தது.

கொழும்பை அண்மித்த நாவல பிரதேசத்தில் அமைந்திருக்கும் அசாத் சாலியின் வீடே நேற்று மாலை தொடக்கம் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டிருந்தது.

கடந்த சில வாரங்களாக காணாமல் போன உறவுக்காரப் பெண்ணொருவர் அசாத் சாலியின் வீட்டில் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தங்களுக்கு அறிவித்துள்ளதாக முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக காணாமல் போன பெண்ணொருவர் தான் அசாத் சாலியின் வீட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தனது உறவினர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த பெண்ணின் உறவினர்கள் பொலிசாருக்கு அறிவித்துவிட்டு அசாத் சாலியின் வீட்டை முற்றுகையிட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவுடன் நேற்று நள்ளிரவு வரை அசாத் சாலியின் வீடு அமைந்திருக்கும் பகுதியில் பொலிசாரும், ஊடகவியலாளர்களும் குழுமி இருந்தனர்.

எனினும் நள்ளிரவு வரை அந்த வீட்டிலிருந்து அசாத் சாலி வெளியில் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

SHARE