சீனா தலைநகர் பீஜிங்கில் ஊரடங்கு பீதியால் சூப்பர் மார்க்கெட்டுகளில் திரண்ட மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவித்து வருகின்றனர்.
பீஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால் மறுபடியும் ஊரடங்கு அறிவிக்கப்படும் என மக்கள் எண்ணத் தொடங்கினர்.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கினர்.
அதன்படி வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் காலியாக காணப்படுகின்றன. அதேவேளை ஊரடங்கு அறிவிப்புகள் வதந்தி என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.